Jul 3, 2011

பென்ட்ரைவினை பாதுகாக்க சில வழிகள்


இப்பொழுதெல்லாம் யூஎஸ்பி பென்ட்ரைவ் இல்லாதவர்களை பார்ப்பது மிகவும் அரிது. ஏனெனில் கணணி பயன்பாடு அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது.
கணணி எப்படி எல்லோருக்கும் தெரிந்திருக்கிறதோ அது போல் பென்ட்ரைவினையும் தெரியும் ஏன் என்றால் இப்பொழுது வரும் ம்யூசிக் சிஸ்டங்கள் எல்லாம் யூஎஸ்பி பென்ட்ரைவ் ஆதரிக்கும் வகையில் வெளிவருகிறது.

அது போலவே எல்சிடி, எல்இடி டிவிக்களும், டிவிடி ப்ளேயர்களும் பென்ட்ரைவினை ஆதரிக்கும் வகையில் வெளிவருகிறது. அதனால் எல்லோருக்கும் பென்ட்ரைவினை பாதுகாக்கும் வழிகள் தெரிந்து கொள்ள ஆசை வருகிறது.

1. Disabled Autorun - ஆட்டோ ரன் நிறுத்தம்: பென்ட்ரைவினை கணணியில் செருகியவுடன் ஆட்டோ ரன் ஆகும். இதனால் இதில் உள்ள கோப்புகள் எந்த மென்பொருள் மூலம் திறக்க வேண்டும் என்று விண்டோஸ் காட்டும். இதன் மூலம் வைரஸ்களும் எளிதாக தொற்றும். இதை முதலில் தடுக்க வேண்டும். இதற்கு AutoRun Disable செய்ய வேண்டும்.

இதற்கு மைக்ரோசாப்டிலேயே தனியாக பேட்ச் மென்பொருள் கிடைக்கிறது. இதை நிறுவினால் உங்கள் கணணியில் சீடி, டிவிடி, பென்ட்ரைவ் எது போட்டாலும் தானாக ப்ளே செய்யாது. அதாவது Auto Play Run தானாக நடக்காது.

2. Scan Your Pen Drive - பென்ட்ரைவினை சோதித்தல்: ஒவ்வொரு முறை உங்கள் பென்ட்ரைவினை கணணியில் செருகும் பொழுது உங்கள் கணணியில் உள்ள ஆன்டிவைரஸால் கட்டாயம் சோதிக்க வேண்டும். இதன் மூலம் கணணியிலும் வைரஸ் வராமல் தடுக்க முடியும். அத்துடன் பென்ட்ரைவினில் வைரஸ் இருந்தாலும் தடுக்க முடியும்.

அதற்கு உங்கள் கணணியில் நல்ல ஆன்டிவைரஸ் கட்டாயம் நிறுவி இருக்க வேண்டும். ஆன்டிவைரஸ் நிறுவுவதோடு நின்று விடாமல் உங்கள் ஆன்டிவைரஸ் தினமும் அப்டேட் ஆகிறதா என்றும் சோதித்துக் கொள்ளுங்கள். பென்ட்ரைவினை செருகியவுடன் உங்கள் கணணியில் Go To > My Computer > சென்று அங்கு உங்களுடைய பென் ட்ரைவினை Right Click செய்து Scan செய்யவும்.

3. Safely Remove Your Pen Drive - பென் ட்ரைவினை பாதுகாப்பாக நிறுத்துதல்: இது முக்கியமான ஒன்று நிறைய பேர் இந்த தவறினை செய்கிறார்கள். அது என்னவென்றால் பென்ட்ரைவில் இருக்கும் கோப்புகளை நேரடியாக பென்ட்ரைவ் வழியாக திறப்பது. சரி திறப்பது கூட பரவாயில்லை அந்த கோப்பினை பென்ட்ரைவில் வைத்து கொண்டே வேலை செய்வது.

இதனால் என்னாகிறது பென்ட்ரைவ் தொடர்ந்து வேலை செய்ய வேண்டி வரும். இதனால் சீக்கிரம் பென்ட்ரைவ் பழுதாகிறது. இதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்றால் பென்ட்ரைவில் எந்த கோப்பினை எடிட் செய்ய விரும்புகிறீர்களோ அதை கணணியில் சேமித்து விட்டு பிறகு கணணியில் இருந்து எடிட் செய்யுங்கள். அதுவே மிகவும் சிறந்தது.

அடுத்து யூஎஸ்பியை நிறுத்தாமல் அப்படியே பென்ட்ரைவினை பிடுங்குவது. எல்லோருமே யூஎஸ்பி பொருட்களான பென்ட்ரைவ், டிவிடி ட்ரைவ் பாக்கெட் ஹார்ட் டிஸ்க்குகள் போன்றவற்றை விண்டோஸில் இணைந்திருக்கும் மென்பொருட்கள் வழியாக நிறுத்திய பிறகே எடுக்க வேண்டும்.

அப்படி இல்லாவிடில் சிறு மென்பொருட்கள் இருக்கிறது. யூஎஸ்பியை நிறுத்துவதற்கென்றே வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அதன் மூலம் நமக்கு தேவையான யூஎஸ்பி பென்ட்ரைவ் அல்லது வேறு எந்த யூஎஸ்பி வன் பொருட்களையும் இந்த மென்பொருட்கள் மூலம் நிறுத்திய பிறகு எடுக்கலாம்.

4. General Tips - சில பொதுவான வழிமுறைகள்: அடுத்து நம் உபயோகிக்கும் பென்ட்ரைவினை எங்கு வேண்டுமானாலும் கொண்டு செல்வதற்காக வைத்திருக்கிறோம் என்பதற்காக அதை எப்பொழுதும் கழுத்திலேயே மாட்டி வைத்திருப்பது அல்லது மிகவும் சூடான பகுதிகளில் வைப்பது போன்றவைகளை கட்டாயம் தவிருங்கள்.

அத்துடன் வீட்டினுள் கணணி, ஸ்பீக்கர் அல்லது ஹோம் தியேட்டர்கள் மீது பென்ட்ரைவினை வைப்பதையும் தவிர்த்து விடுங்கள். ஏன் என்றால் இதில் எல்லாமே காந்தசக்தி இருப்பதால் சுலபத்தில் உங்கள் தகவல்கள் யூஎஸ்பி பென்ட்ரைவில் இருந்து காணாமல் போய் விடும்.

சில நேரங்களில் யூஎஸ்பி பென்ட்ரைவ் தண்ணீரில் விழுந்து விட்டால் உடனே எடுத்து துடைத்து விட்டு கணணியில் உபயோகப்படுத்தாதீர்கள். தண்ணீரில் விழுந்த பென்ட்ரைவினை 48 மணி நேரங்கள் கழித்தே உபயோகிக்கவும்.

அந்த இடைவெளியில் உங்கள் பென் ட்ரைவினை சமையல் செய்து வைத்த பாத்திரத்தில் மிதமான சூடு இருக்கும் பட்சத்தில் அதன் மேல் வைத்தால் ஓரளவு தண்ணீர் இழுக்கும்.

அது போல உங்கள் அரிசி வைத்திருக்கும் பாத்திரத்தில் போட்டு வைத்தால் உங்கள் பென்ட்ரைவில் இருக்கும் நீர் சுலபமாக வெளியேற்றப்படும். ஏன் என்றால் அரிசி நீரினை அதிகளவு உறிஞ்சும் தன்மை உடையது.

About Me

My photo
Share the information which attract me.

image

Lorem ipsum dolor sit

Aliquam sit amet urna quis quam ornare pretium. Cras pellentesque interdum nibh non tristique. Pellentesque et velit non urna auctor porttitor.

image

Nunc dignissim accumsan

Vestibulum pretium convallis diam sit amet vestibulum. Etiam non est eget leo luctus bibendum. Integer pretium, odio at scelerisque congue.