மட்டக்களப்பு புதுநகரில் நேற்றிரவு நடமாடிய மர்ம மனிதர்களை அப்பகுதி பொது மக்கள் துரத்திச் சென்ற போது அவர்கள் சேத்துக்குடா காவலரணுக்குள் புகுந்ததாகத் தெரிவித்து இன்று காலை புதூர் விமான நிலையத்துக்கு அருகில் அப்பகுதி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மர்மமனிதர்களாக நடமாடி மக்களை அச்சுறுத்தி வருபவர்கள் இராணுவத்தினரும், காவல்துறையினருமே என குற்றம் சாட்டியதுடன் இவர்களின் முகாம்களை உடனடியாக அகற்றி தங்களை நிம்மதியாக வாழ விட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.தற்போது மாணவர்களுக்கான உயர்தரப்பரீட்சை இடம்பெறுகின்ற நிலையில் மாணவர்களை பரீட்சைக்குத் தயார்படுத்த முடியாத அளவுக்கு இந்த மர்ம மனிதர் பிரச்சினை பாரிய சிக்கலை ஏற்படுத்தி வருவதாகவும், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாரிய அளவில் உளரீதியான பாதிக்கப்பட்டிருப்பதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். தாம் வெளியில் நடமாட முடியாத அளவிற்கு அச்சம் அடைந்திருப்பதாக அங்கு கூடியிருந்த பெண்கள் தெரிவித்தனர்.தங்களது கிராமங்களுக்குள் நுழையும், மர்ம மனிதர்கள் விமான நிலையம், மற்றும் சேத்துக்குடா காவல் அரண் போன்ற பகுதிகளுக்குள்ளே தப்பிச் செல்வதாக அக்கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஊரின் மத்தியில் அமைந்துள்ள சேத்துக்குடா பொலிஸ் காவல் அரணை உடனடியாக அகற்றுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் வீதிகளில் ரயர்களை எரித்து வீதித்தடையை ஏற்படுத்தினர், இதனால் மட்டக்களப்பு நகருக்கும் படுவான்கரைக்குமான போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.இன்று காலையில் மட்டக்களப்பு நகரிலிருந்து படுவான்கரைக்கு சென்ற அரச ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் இந்த ஆர்ப்பாட்டத்தால் தமது பயணத்தை தொடரமுடியாது திரும்பி வந்தனர்.படுவான்கரையிலிருந்து வந்த மக்களுக்கும் மட்டக்களப்பு நகருக்குள் நுழைய முடியாத நிலையில் தமது ஊர்களுக்கு திரும்பி சென்றனர்.பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதை அறிந்த மட்டக்களப்பு மாநகர முதல்வர் சிவகீதா பிரபாகரன், மண்முனைப்பற்று பிரதேச சபைத் தவிசாளர் சசிதரன் கிரிஸ்ரினா, வவுணதீவு பிரதேச சபை உறுப்பினர் கே.விமலநாதன், மாநகர சபை உறுப்பினர் கிருபைராஜா உட்பட பலரும் அங்கு வந்து மக்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.Aug 16, 2011
மலசலகூடத்துள் மறைந்திருந்த மர்ம மனிதர்: பெண் மீது தாக்குதல்
அக்கரைப்பற்று கோளாவில் பிரதேசத்தில் குடும்ப பெண்ணொருவர் நேற்று மாலை மர்மமனிதர்களால் தாக்கப்பட்டு காயமடைந்த நிலையில் அக்கரைப்பற்று மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கோளாவில் இரண்டாம் பிரிவு குமார் கடை வீதியிலுள்ள ஒருபிள்ளையின் தாயாரான ஜெகன் சோதிமலர் (20) என்பவரே மர்ம மனிதனின் தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்துள்ளார்.
அவரது வீட்டிலுள்ள மலசல கூடத்திற்கு சம்பவ தினம் மாலை 3 மணியளவில் சென்றபோது மலசல கூடத்திற்குள் மறைந்திருந்த இரு மர்ம மனிதர்கள் அவரை பிடித்து கை, கால்களை கம்பியினால் கட்டி வாயை சலோரேப்பினால் ஒட்டிய போது அருகிலுள்ள வீட்டின் பெண் ஒருவர் கண்டு கூச்சலிட்டதையடுத்து மர்ம மனிதர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இச்சம்பவத்தில் குறித்த பெண் சிறுகாயங்களுடன் மயக்கமடைந்த நிலையில் அக்கரைப்பற்று மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து வைத்தியசாலையில் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த பொலிஸார் மீது பொது மக்கள் கல்வீச்சு நடாத்தியதையடுத்து கலகமடக்கும் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் சம்பவ இடத்துக்கு சென்று பொதுமக்களை தடியடிபிரயோகம் செய்து கலைத்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பிரதேச மக்கள் பெரும்அச்சமும் பீதியுமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கோளாவில் இரண்டாம் பிரிவு குமார் கடை வீதியிலுள்ள ஒருபிள்ளையின் தாயாரான ஜெகன் சோதிமலர் (20) என்பவரே மர்ம மனிதனின் தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்துள்ளார்.
அவரது வீட்டிலுள்ள மலசல கூடத்திற்கு சம்பவ தினம் மாலை 3 மணியளவில் சென்றபோது மலசல கூடத்திற்குள் மறைந்திருந்த இரு மர்ம மனிதர்கள் அவரை பிடித்து கை, கால்களை கம்பியினால் கட்டி வாயை சலோரேப்பினால் ஒட்டிய போது அருகிலுள்ள வீட்டின் பெண் ஒருவர் கண்டு கூச்சலிட்டதையடுத்து மர்ம மனிதர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இச்சம்பவத்தில் குறித்த பெண் சிறுகாயங்களுடன் மயக்கமடைந்த நிலையில் அக்கரைப்பற்று மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து வைத்தியசாலையில் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த பொலிஸார் மீது பொது மக்கள் கல்வீச்சு நடாத்தியதையடுத்து கலகமடக்கும் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் சம்பவ இடத்துக்கு சென்று பொதுமக்களை தடியடிபிரயோகம் செய்து கலைத்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பிரதேச மக்கள் பெரும்அச்சமும் பீதியுமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கிண்ணியாவில் முறுகல், காவல்துறை ஜீப் எரிப்பு - காயப்பட்டவர்களில் ஒருவர் நிலை மோசம்!
திருகோணமலை கிண்ணியாவில் தொடர்ந்தும் முறுகல் நிலை தீவிரமாகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மர்ம மனிதர்கள் என்போரை பொதுமக்கள் துரத்தி சென்ற போது அவர்கள் வைத்தியசாலைக்கு அருகில் உள்ள கடற்படை முகாமுக்குள் ஓடித் தப்பியதும் பின்னர் அந்த முகாம் மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்தியதும் ஏற்கனவே வெளியான செய்திகள்.
இந்தநிலையில் சம்பவத்தின் போது படையினரின் துப்பாக்கி சூட்டுக்கு உள்ளான இரண்டு பொதுமக்களில் ஒருவரின் நிலைமை மிகவும் மோசம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரும் காயம் அடைந்த மற்றும் ஒருவரும் திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை சம்பவத்தின் போது பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட 24 பொதுமக்களும் சீனன்குடா பாலத்துக்கு அருகில் பொலிஸாரினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து அவர்களை விடுவிக்கவேண்டும் எனக் கோரி, நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கிண்ணியா அரச அதிபர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள 27 பேரையும் விடுவிக்குமாறு கோரியுள்ளனர்.
அதேவேளை படைத்தரப்பினரும் கவச வாகனங்கள் சகிதம், தாக்குதலுக்கு தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இரண்டாம் இணைப்பு
இரண்டாம் இணைப்பு
கைதுசெய்யப்பட்ட 24 பேரும் பிணையில். கிண்ணியாவில் முறுகல் தணிந்தது.
திருகோணமலை கிண்ணியாவில் ஏற்பட்டிருந்த முறுகல் நிலை தணிந்துள்ளது.
கிண்ணியா பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், றிசாட் பதீயுதீன், ஏ.ஏச்.எம்.பௌசி உள்ளிட்ட விசேட தூதுக்குழுவொன்று விசேட ஹெலிக்கப்பட்டர் மூலம் இன்று காலை கிண்ணியா பிரதேசத்திற்கு விஜயம் செய்துள்ளனர்.
இதேவேளை, கிண்ணியா பிரதேசத்தில் மர்ம மனிதர்களின் நடமாட்டம் குறித்து பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை என திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் மேஜர் ஜெனரல் வீ.ஆர்.டி.சில்வா கிண்ணியா பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டுள்ள பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் மத்தியில் உரையாற்றும் போது தெரிவித்தார்.
கலவரங்கள் எவற்றிலும் ஈடுபடாது அமைதியாக வீடுகளில் இருக்குமாறும் பொதுமக்களுக்கான பாதுகாப்பை உடனடியாக வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
திருகோணமலை, கிண்ணியா பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வேளையிலும் இன்று திங்கட்கிழமை அதிகாலை வேளையிலும் மர்ம மனிதர்களின் நடமாட்டம் காரணமாக பொதுமக்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையில் குழப்ப நிலைமை ஏற்பட்டது.
இதனால், 24 பேர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டனர். இவர்களில் ஐந்து பேர் இன்றைய தினம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் க.பொ.த. உயர் தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களும் உள்ளடங்குகின்றனர்.
இதனைத் தொடர்ந்து அப்பிரதேசத்தில் நிலவிய பதற்ற நிலையை தணிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆராயும் கூட்டமொன்று கிண்ணியா பிரதேச செயலகத்தில் இன்று காலை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக், திருகோணமலை மாவட்ட செயலாளர் மேஜர் ஜெனரல் வீ.ஆர்.டி.சில்வா மற்றும் இராணுவத்தின் கிழக்கு மாகாண கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் பொனிபெஸ் பெரோ உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது, கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி கிண்ணியா பிரதேச செயலகத்தை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முற்றுகையிட்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, கிண்ணியா பிரதேசத்தில் ஏற்பட்ட அசாதாரண நிலைமையையடுத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட 24 பேரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக அறியவந்துள்ளது.
இதேவேளை, கிண்ணியா பிரதேசத்தில் ஏற்பட்ட அசாதாரண நிலைமையையடுத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட 24 பேரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக அறியவந்துள்ளது.
காவல்துறை ஜீப் எரிப்பு
சிறிலங்கா காவல்துறையினரின் ஜீப் வண்டியொன்றையும் பொதுமக்கள் தீயிட்டு எரித்தனர். பொதுமக்களின் கல்வீச்சுக்கு இலக்காகி காவல்துறையினர் இருவரும் காயமடைந்தனர்.
அதேவேளை, கிண்ணியா மத்திய பள்ளிவாசலுக்குள் இன்று அதிகாலை 3 மணியளவில் புகுந்த மர்ம மனிதர்கள் பத்துப் பேர் தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியதில் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.
பொத்துவிலில் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் பலியானவரின் நல்லடக்கம்
பொத்துவில் பிரதேசத்தில் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் நேற்று பலியான அலியார் முஹம்மது மஹ்ஜுனின் ஜனாஸா நல்லடக்கம் இன்று சனிக்கிழமை காலை பொத்துவில் கடற்கரை மையவாடியில் ஆயிரக்கணக்கானோரின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது.
இந்த ஜனாஸா நல்லடக்கத்தில் அமைச்சர்களான ஏ.எச்.எம்.பௌசி, ரவூப் ஹக்கீம், ஏ.எல்.எம்.அதாவுல்லா, பிரதியமைச்சர் எம்.ஏல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, நாடாளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம்.ஹரீஸ், பைசால் காசிம், கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை, கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான கே.எம்.ஜவாத், எம்.ஏ.அப்துல் மஜீட் மற்றும் ஏ.எம். ஜெமீல் உள்ளிட்ட பல அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
மரணமடைந்த அலியார் முஹம்மது மஹ்ஜுன் (வயது 32) இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார். இவர் கடந்த மார்ச் மாதம் இடம்பெற்ற பொத்துவில் பிரதேச சபை தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த ஜனாஸா நல்லடக்கத்தில் அமைச்சர்களான ஏ.எச்.எம்.பௌசி, ரவூப் ஹக்கீம், ஏ.எல்.எம்.அதாவுல்லா, பிரதியமைச்சர் எம்.ஏல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, நாடாளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம்.ஹரீஸ், பைசால் காசிம், கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை, கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான கே.எம்.ஜவாத், எம்.ஏ.அப்துல் மஜீட் மற்றும் ஏ.எம். ஜெமீல் உள்ளிட்ட பல அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
மரணமடைந்த அலியார் முஹம்மது மஹ்ஜுன் (வயது 32) இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார். இவர் கடந்த மார்ச் மாதம் இடம்பெற்ற பொத்துவில் பிரதேச சபை தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது.
Aug 13, 2011
கிரீஸ் மனிதர்களின் அட்டகாசமும் சிவில் சமூக அவதானமும்….!
கடந்த பல தினங்களாக நாட்டின் பல பாகங்களிலும் கிரீஸ் மனிதர்களின்
அட்டகாசம் அதிகரித்து வந்துள்ளமையால் மக்கள் பீதியும் அச்சமும் கொண்டுள்ளனர்,
குறிப்பாக மாதர்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப் படும் தாக்குதல்கள் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ள அதே வேளை பாது காப்பு தரப் பினரால் காத்திரமான் எந்த நடவடிக்கைகளும் எடுக்கப் படாமையும் , கைது செய்யப்படுபவர்கள் மன நிலை பாதிக்கப் பட்டவர்கள் என விடுதலை செய்யப்படுவதும் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் நம்பிக்கையீனத்தையும் உண்டாக்கியுள்ளது.
இந்த நிலைமையில் முஸ்லிம்கள் பிற சமூகங்களோடு கூட்டாகவும் தனித்தும் தமது பாது காப்பு குறித்து கவனம் செலுத்த வேண்டும், வெறுமனே அரசியல் வாதிகளையோ, பிரபலங்கலையோ ,கொழும்பிலுள்ள அமைப்புகளையோ மாத்திரம் நம்பியிராது சிவில் சமூக கூட்டு நடவடிக்கைகளை சகல இயக்க கட்சி குழு வேறுபாடுகளுக்கப்பால் எடுக்க முன்வர வேண்டும்.
அந்த வகையில் குறிப்பாக இன்றைய ஜும்மா குத்பாக்களில் உலமாக்கள் பள்ளி நிர்வாகிகளின் ஆலோசன்களைப் பெற்று மிகவும் பொறுப்புடனும், நிதானமாகவும் மக்களை அறிவுறுத்தல் வேண்டும், தொழுகையில் குனுத் ஓதி எல்லாம் வல்ல இறைவனிடம் நமது பாது காப்பிற்காக கரமேந்துவதொடு, தீய சக்திகளை அழித்து ஒழித்து சகல சமூகங்களின் சமாதான சக வாழ்விற்காகவும் பிரார்த்தனை செய்ய வேண்டும்.
ஜும்மா தொழுகையின் பின்னர் அல்லது கூடிய விரைவில் ஒவ்வொரு மகால்லவிலும் சகல தரப்புகளையும் கொண்ட “மஜ்லிஸ் அல் ஷூரா” க்களை அமைத்துக் கொள்ளுவதன் மூலம் தமது இருப்புக்கும் பாதுகாப்புக்கும் ,சமூக பொருளாதார வாழ்விற்கும் விடுக்கப் படுகின்ற எத்தகைய சவால்களுக்கும் முகம் கொடுக்க தயாராக வேண்டும்.
இந்த நாட்டின் பிரஜைகள் நாம் எத்தகைய தீய சக்திக்கும் அஞ்சி வாழ வேண்டிய அவசியம் கிடையாது…அடுத்த சமூகங்களுடன் எப்பொழுதும் போல புரிந்துணர்வை வளர்த்துக் கொள்வதோடு குறித்த பிரச்சினையில் அக்கம் பாக்கத்திலுள்ள அடுத்த மதத் தலைவர்கள் சிவில் அமைப்புகளையும் கலந்து பேசி தீய சக்திகளை ஒழித்துக் கட்ட அவர்களிடமிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள /கொல்ல நாம் மிகவும் சமயோசிதமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
குறிப்பாக ஊடக வியலாளர்கள் தமது சமூகப் பொறுப்பை சரிவரச் செய்வதன் மூலம் இந்த செய்தியை உரிய தரப்பினர்களின் கவனத்திற்கு கொண்டு வருவார்கள் என எதிர் பார்ப்பதோடு இவ்வாறான அறிவுறுத்தல்களை வாசிக்கும் ஏனைய சகோதரர்களும் தமது ஊர் ஜமாத்துகளின் அவதானத்திற்கு கொண்டு வருமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
மர்ம மனிதன் சம்மாந்துறையில் நடந்தது என்ன?
எவியாழக்கிழமை இரவு 7.30 மணியளவில் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையிலுள்ள கோரக்கோயில் பிரதேசத்தில் பெண்ணொருவர் குளித்துக்கொண்டு இருந்திருக்கிறார். இரவுவேளையில் அவ்விடத்திற்கு மர்மமான முறையில் வந்த இருவர் அப்பெண்மீது சேஷ்டையில் ஈடுபட்டுள்ளனர்.
உடனே அப்பெண் கூச்சலிட்டு ஊரைக் கூட்டியதும் அவ்விருவரும் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்திற்குள் புகுந்துள்ளனர். இதனை அவதானித்த பொதுமக்கள் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு சந்தேக நபர்களை தங்களிடம் ஒப்படைக்குமாறு சத்தமிட்டுள்ளனர். இவர்களை பொலிஸார் அகற்ற முற்பட்டவேளையில் பொலிஸார் மீது கல்லெறிகள் விழுந்துள்ளன. ஆத்திரமடைந்த பொலிஸார், கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி கலகத்தில் ஈடுபட்டவர்களை அடக்க முற்பட்டிருக்கிறார்கள்.
இது தொடர்பாக களமுனையிலிருந்து எமது செய்தியாளர் தெரிவிக்கையில்; இங்கு ஒரு பெண்ணின் கையை இனந்தெரியாதவர்கள் (மர்ம மனிதர்கள்) கிளித்துவிட்டுச் சென்றனர். உடனே மக்கள் அவரை விரட்டிப்பிடிக்கச் சென்றனர். தீடீரென் அவன் பொலிஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளான். பொதுமக்கள் மர்ம மனிதனைத் தேடி வலை விரிந்திருக்கின்றனர். கையை வெட்டியவனும் மர்ம மனிதனாகத்தான் இருக்கவேண்டும் என்று சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் மக்கள் ஒன்றுகூடி அவனைக் காட்டுமாறு கூச்சலிட்டுள்ளனர்.
மர்ம மனிதனின்மேல் ஆத்திரத்தில் இருக்கும் மக்கள் அவனைக் கொன்றுவிடுவார்கள் என பொலிஸார் பொதுமக்களைத் தடுக்கவே, பொலிஸாரை நோக்கி கல்லெறிகள் வீழ்ந்தன. மக்கள் அவனை தங்களிடம் ஒப்படைக்குமாறு கோஷமிட்டனர். இதனைக் கட்டுப்படுத்த பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம் செய்தனர். தற்போது அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தற்சமயம் நிலைமை சுமூக நிலைக்குத் திரும்பியுள்ளது. விசேட அதிரடிப்படையினரும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். சேத விபரம் பற்றி இதுவரை எதுவித தகவலும் வரவில்லை. இதுபற்றி பொலிஸாருடன் தொடர்புகொண்டு கேட்டபோது எதுவும் சொல்ல மறுத்துவிட்டனர். தற்போது மர்ம மனிதன் என்ற பெயரில் சந்தேக நபர்கள் மக்களால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படுவம் பொலிஸார் அவர்களைக் காப்பாற்றுவதாலும் பொதுமக்களுக்கு அரசு மீதான சந்தேகம் வலுப்பெறுவதாக பலமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
உண்மையில் நடப்பது என்ன? யார் இந்த கிறீஸ் (மர்ம) மனிதன்? ஏன் பெண்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தவேண்டும்? அல்லது தற்போது மர்ம மனிதன் பெயரைப் பயன்படுத்தி வெளியாட்கள் தங்களது கைவரிசையைக் காட்டுகின்றார்களா? இதற்கான உள்நோக்கம் என்ன? அரசு ஏன் இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை? இவ்வாறான பல கேள்விக் கணைகளுக்கு விடைதெரியாமல் இந்த மனிதனைப் போலவே மர்மமாக உள்ளது.
வாழைச்சேனை மர்ம மனிதனை இஸ்லாமிய நீதிமன்றத்தில் ஒப்படைக்க கோரி ஆர்பாட்டம் செய்தார்களா ?
மேலும் அவர் தெரிவித்துள்ளத்தில் கிறிஸ் மனிதன் என்ற வதந்தி திருடர்கள் மற்றும் கொள்ளையர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு காரணமாக அமைந்துள்ளது.
எனவே, இத்தகைய வதந்தியை மக்கள் நம்பவேண்டாமெனவும் இவ்வாறான போலி வார்த்தைகளை உச்சரிப்பதை தவிர்த்துக் கொள்ளுமாறு பொலிஸ்மா அதிபர் என்.கே. இளங்கக்கோன் பொதுமக்களிடமும், ஊடகங்களிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கிறிஸ் மனிதன் எனும் பெயரில் போலி நாடகமாடிய 47 பேர் இதுவரை கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் 47 பேரில் பெரும்பாலானோர் போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள். இவர்கள் போதை மயக்கத்திலும் அச்சமயம் கொண்டிருந்த மனநிலை மற்றும் காமக்குரோதம் காரணமாகவும் பெண்களை தாங்கள் பயமுறுத்தியதாக ஒப்புக்கொண்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளதுடன்
வாழைச்சேனையில் கைது செய்யப்பட்டவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் எனவும் அவரை பிரதேசவாசிகள் இஸ்லாமிய நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டுமென்று கூறியே பொலிஸாருக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என்றும் தெரிவித்துள்ளார்.
மர்ம மனிதனால் ஓட்டமாவடியில் போலீஸ் பொதுமக்கள் மோதல்
ஓட்டமாவடி வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவில் மர்ம மனிதன் என்று தெரிவிக்கப்படும் நபர் ஒருவனை பொது மக்கள் பிடித்து போலீசிடம் ஒப்படைத்துள்ளனர் அந்த நபரை போலீசார் விடுவித்துள்ளனர் என்ற வதந்தி பரவியதை அடுத்து பொது மக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் இருபத்தைந்து பொலிஸார் மற்றும் நான்கு பொது மக்களும் காயப்பட்டுள்ளனர் என்று கல்குடா முஸ்லிம் தெரிவிக்கின்றது.
அந்த செய்தியில் இன்று ஓட்டமாவடியில் காலை கேணி நகர் கிராமத்தில் உசனார் மர்சூக்கா எனும் இரண்டு பிள்ளைகளின் தாய் மர்ம மனிதன் என்று தெரிவிக்கபடும் நபரினால் தாக்கப்பட்டு வாழைச்சேனை வைத்தியசாலையில் படங்கள் சிகிச்சை பெற்று வருகின்றார் என்றும்
குறித்த பெண்ணை ஊசி போன்ற ஊறிய ஆயுதத்தால் தாக்கியதாக தெரிவிக்கப்படும் நபரை பொது மக்கள் பிடித்து தாக்கிய பின்னர் வாழைச்சேனை பொலிஸாரிடம் ஒப்படைத்த போது பொலிஸார் அவரை விட்டு விட்டார்கள் என்ற வதந்தி பரவியதால் பொது மக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் அந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது
ஓட்டமாவடியில் ஏற்பட்ட கலவரத்தின் போது பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டிக்கு இலக்காகி மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட முகம்மது கனீபா முகம்மது காலிதீன் அவர்கள் தற்போது மட்டக்களப்பு மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார் என்றும் .
இக்கலவரத்தின் போது படுகாயமடைந்த மற்றய நபரான எம்.எப்.எம்.பாறூக் அவர்கள் மட்டக்களப்பு மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். தற்போது அவர் சீடி ஸ்கேன் பரிசோதனைக்கு உட்படுத்தவும் அவச சிகிச்சை மேற்கொள்ளவும் என கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்று அந்த தகவல் தெரிவிக்கின்றது.
மேலும் அந்த தகவலில் மர்ம மனிதன் பற்றிய செய்தியால் சில தினங்களாக மட்டக்களப்பு எல்லைக் கிராமங்களான ரிதிதன்ன, ஜெயந்தியாய பகுதிகளிலும் வெலிகந்தைப் பகுதியில் கட்டுவன்வில, செவனபிட்டி பகுதியிலும் மக்கள் பீதியடைந்திருந்தனர். நேற்று ஓட்டமாவடிப் பகுதியில் நாவலடி, கேணிநகர், அமீரலி கிராமம், பாலை நகர் போன்ற எல்லைப் புற கிராமங்களிலிருந்து மக்கள் தற்காப்பிற்காக அங்கிருந்து வெளியேறி பிற பகுதிகளுக்கு சென்றிருந்தனர். ஆண்கள் மாத்திரம் காவலுக்கு இரவு நேரங்களில் தங்கியிருந்தனர் என்றும் அந்த தகவல் தெரிவிக்கின்றது .
தற்போதைய தகவலின் படி அங்கு நிலைமை வழமைக்கு திரும்பியுள்ளதாகவும் போக்குவரத்துக்கு வழமைபோன்று இடம்பெறுவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றது அதேவேளை இன்று ஏற்பட்ட அசாதாரண நிலையை அடுத்து வழமையாக இரவு 08.30 மணிக்கு நடைபெற்ற தராவீஹ் தொழுகை இரவு 08.00 மணிக்கு நடைபெறும் என வாழைச்சேனை முகைதீன் ஜூம்ஆப் பள்ளிவாயல் அறிவித்துள்ளது.
Aug 12, 2011
மர்மமனிதர்கள்:பாழடைந்த வீட்டினுள் பொலிஸாரின் சீருடைகள், தொப்பிகள், காலணிகள் மீட்பு
பொத்துவில் பாக்கியவத்தை பகுதியில் நேற்று மர்மமனிதர்களின் நடமாட்டத்தால் பொதுமக்களுக்கும் பொலிசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
மர்ம மனிதனால் தாக்கப்பட்டுள்ள பெண்
பொத்துவில் பிரதேசத்தில் மர்ம மனிதனால் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் பெண் ஒருவர் கல்முனை அஷ்ரப் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பொத்துவில் 06ஆம் வட்டாரம் கே.பி.எம்.வீதியை சேர்ந்த ஜூனைதீன் ஆஸிக் (22வயது) என்ற பெண்னே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த பெண்ணின் கணவர் மத்திய கிழக்கு நாடொன்றில் தொழில்செய்துவரும் நிலையில் தனது தாய் தந்தையருடன் குறித்த பெண் வாழ்ந்துவருகின்றார்.
இது தொடர்பில் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் கருத்து தெரிவிக்கையில்,
நேற்று இரவு 8.30 மணியளவில் நான் வெளியில் தண்ணீர் எடுப்பதற்காக சென்றபோது என்னை யாரோ ஒருவர் திடிரென வீட்டில் மேல் பகுதியில் இருந்து தூக்கினர்.
அங்கு பார்த்தபோது உடம்பு எல்லாம் கறுப்பு நிறத்தையுடைய ஒருவன் என்னை பிடித்திருந்தான். நான் கத்த முனைந்தபோது எனது வாய்க்குள் விரலையோட்டினான். அப்போது அந்த விரலில் ஏதோ திரவம் தடவப்பட்டதை உணர்ந்தேன்.
அப்போது அவனது கையில் கூரான ஆயுதம் இருந்தது, நான் பல தடைவ முயற்சி செய்து கத்திய போது அயலவர்கள் வரவே என்னை அவன் கீழே தள்ளிவிட்டு ஓடிவிட்டான் என தெரிவித்தார்.

நன்றி: Battinews
பொத்துவில் 06ஆம் வட்டாரம் கே.பி.எம்.வீதியை சேர்ந்த ஜூனைதீன் ஆஸிக் (22வயது) என்ற பெண்னே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த பெண்ணின் கணவர் மத்திய கிழக்கு நாடொன்றில் தொழில்செய்துவரும் நிலையில் தனது தாய் தந்தையருடன் குறித்த பெண் வாழ்ந்துவருகின்றார்.
இது தொடர்பில் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் கருத்து தெரிவிக்கையில்,
நேற்று இரவு 8.30 மணியளவில் நான் வெளியில் தண்ணீர் எடுப்பதற்காக சென்றபோது என்னை யாரோ ஒருவர் திடிரென வீட்டில் மேல் பகுதியில் இருந்து தூக்கினர்.
அங்கு பார்த்தபோது உடம்பு எல்லாம் கறுப்பு நிறத்தையுடைய ஒருவன் என்னை பிடித்திருந்தான். நான் கத்த முனைந்தபோது எனது வாய்க்குள் விரலையோட்டினான். அப்போது அந்த விரலில் ஏதோ திரவம் தடவப்பட்டதை உணர்ந்தேன்.
அப்போது அவனது கையில் கூரான ஆயுதம் இருந்தது, நான் பல தடைவ முயற்சி செய்து கத்திய போது அயலவர்கள் வரவே என்னை அவன் கீழே தள்ளிவிட்டு ஓடிவிட்டான் என தெரிவித்தார்.
நன்றி: Battinews
Aug 8, 2011
யுவான் ரிட்லி - துணிச்சலின் மறு பெயர்
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...
உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்
யுவான் ரிட்லி (Yvonne Ridley), நம்மில் பலருக்கும் நன்கு தெரிந்த பெயர். பிரிட்டன் நாட்டைச் சேர்ந்தவர். பத்திரிக்கையாளர், சமூக சேவகர், அரசியல்வாதி என்று பல பரிமாணங்களை கொண்டவர்.
இவர் பேச நான் கேட்ட மற்றும் படித்த சில தகவல்களை இந்த பதிவில் உங்களுடன் பகிர்ந்து கொள்ளவிருக்கிறேன்...இன்ஷா அல்லாஹ்
இவர் இஸ்லாத்திற்கு வந்த விதம் பற்றி சுருக்கமாக...
அது செப்டம்பர் 2001 ன் பிற்பகுதி, சகோதரி யுவான் ரிட்லி அவர்கள் பிரிட்டனின் சண்டே எக்ஸ்பிரஸ் பத்திரிக்கைக்காக பணியாற்றிய நேரம். உலகம், அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதல்களால் ஸ்தம்பித்திருந்த நேரம். அமெரிக்காவின் சந்தேகக் கண்கள் அப்கானிஸ்தான் மீதும், அதனை ஆளும் தாலிபான்களின் மீதும் வலுவாக விழுந்திருந்த சமயம்.
இந்த சூழ்நிலையில் தான் யுவான் ரிட்லி அவர்கள், தாலிபான்களை பற்றி செய்தி சேகரிப்பதற்காக பாகிஸ்தானில் இருந்து அப்கானிஸ்தானிற்கு புறப்பட்டார். ஆனால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இருந்தும் மறைமுகமாக அப்கானிஸ்தானிற்குள் நுழைந்து விட்டார். எப்படி? புர்காவை அணிந்து, எல்லையார மக்கள் செல்வது போல் கழுதையின் மீது பயணம் செய்து அப்கானிஸ்தானிற்குள் நுழைந்து விட்டார்.
உள்ளே நுழைந்த சிறிது நேரத்தில், தாலிபன் வீரர் ஒருவரின் முன், கழுதையிலிருந்து தவறி விழுந்து மாட்டிக்கொண்டார். உளவாளி என்று சந்தேகம் எழுப்பி தாலிபன் அரசாங்கம் அவரை சிறையில் தள்ளியது. பதினோரு நாட்கள் சிறைவாசத்திற்கு பின்பு, அக்டோபர் 9, 2001ல், தாலிபன்களால் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டார்.
சிறையிலிருக்கும் போது தன்னை ஒரு தாலிபன் வீரர் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள அழைத்ததாகவும், தான் மறுத்து விட்டதாகவும், ஆனால் சிறையிலிருந்து வெளியே சென்ற பின் குரானைப் படிப்பதாக தான் அந்த வீரரிடம் சொன்னதாக யுவான் ரிட்லி பின்னர் தெரிவித்தார்.
கொடுத்த வாக்குறுதியை காப்பதற்காகவும், மேலும் பெண்களின் நிலை பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது என்று ஆராய்வதற்கும் குரானைப் படிக்க, 2003 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். அல்ஹம்துலில்லாஹ்...
இனி இவர் சொல்ல நான் படித்த, கேட்ட சில தகவல்கள்...
சிறையிலிருந்த போது...
"நான் சிறையிலிருந்த நாட்களில், அவர்களை கடுமையாக திட்டிருக்கிறேன், அவர்களை நோக்கி உமிழ்ந்திருக்கிறேன், அவர்கள் தந்த உணவை உண்ணாமல் அவர்களை அசிங்கப்படுத்தியிருக்கிறேன். இதையெல்லாம் விட, ஒருநாள், என் ஆடைகளை களைந்துவிட்டு அவர்கள் முன் நின்று அவர்களை சங்கடப்படுத்திருக்கிறேன்.
அப்போது அங்கு வரவழைக்கப்பட்ட தாலிபான்களின் உதவி வெளியுறவுத்துறை அமைச்சர் (Deputy Foreign Misniter) என்னிடம், நீங்கள் இப்படி செய்வது சரியில்லை, உங்கள் ஆடைகளை திருத்திக்கொள்ளுங்கள், உங்கள் செயல் எங்கள் வீரர்களின் மனதில் தவறான எண்ணங்களை விதைக்கக்கூடும் என்றார்.
இன்னும் சில நாட்களில் அமெரிக்கா இவர்கள் மீது குண்டு வீசப் போகிறது, அதைப்பற்றி இவர்கள் கவலைப்படவில்லை, என் உடையைப்பற்றி தான் அதிகம் கவலைப்படுகிறார்கள். அமெரிக்கா இவர்களை விரட்ட தேவையில்லாமல் பணத்தை செலவழித்துக்கொண்டிருக்கிறது, ஆபாசமாக உடையணிந்த பெண்களை இவர்கள் முன்பு அழைத்து வந்தாலே போதும், இவர்கள் ஓடிவிடுவார்கள்"...
சிறையிலிருந்து வெளியே வந்த இவர் தாலிபன்கள் தனக்கு சிறையில் ஒரு பெண்ணுக்குண்டான மதிப்பை அளித்ததாக தெரிவித்தார். அவ்வளவுதான். சில ஊடகங்கள் இவருக்கு "ஸ்டாக்ஹோம் சின்றோம் (Stockholm synrome)" பிரச்சனை இருப்பதாக தெரிவித்தன. இந்த பிரச்சனை இருப்பவர்கள், தங்களை கடத்தியவர்களுக்கு சாதகமாக பேசுவார்களாம். அதுசரி...
தான் சார்ந்த சண்டே எக்ஸ்பிரஸ் பத்திரிகை தன்னை காப்பாற்ற முயற்சி செய்ததை பற்றி குறிப்பிடும் இவர்,
"சண்டே எக்ஸ்பிரஸ்சின் உரிமையாளர் ஒரு யூதர். அவர் என்னைக் காப்பாற்ற ஒரு குழுவை அமைத்து, இஸ்லாமாபாத்தில் உள்ள தாலிபன் தூதரகத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அவர்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டு கொடுத்துவிடுங்கள், எப்படியாவது ரிட்லியை என்னிடம் கொண்டு வாருங்கள் என்று கட்டளையிட்டுவிட்டார்.
அவர் அமைத்த குழுவின் தலைவர் தாலிபன்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையின் முடிவில் அவர் சண்டே எக்ஸ்பிரஸ் உரிமையாளரை தொடர்பு கொண்டு பேசினார்.
அவர்களுக்கு எவ்வளவு பணம் வேண்டும் என்று கேட்டீர்களா? ஒரு மில்லியன், இரண்டு மில்லியன்?
இல்லை சார், நான் கொண்டுச்சென்ற காசோலையை திரும்ப கொண்டு வந்துவிட்டேன். அவர்களுக்கு பணமெல்லாம் வேண்டாமாம்..
என்ன பணம் வேண்டாமா, வேறு என்ன வேண்டுமாம், ஆயுதங்களா?
இல்லை சார், அவர்களுக்கு எதுவும் வேண்டாமாம், நம்மைப் போன்றவர்கள் அவர்களுக்கு குறைந்தபட்ச மரியாதை அளித்தால் போதுமாம்.
இதனை அந்த குழுத்தலைவர் என்னிடம் விவரித்தார். தாலிபன்கள் மீதான வெறுப்பு உச்சத்தில் இருந்த நேரமது. அவர்கள் சொல்லியதில் நிறைய அர்த்தமிருக்கிறது. மேலும் சண்டே எக்ஸ்பிரஸ் குழுவினர் என்னை காப்பாற்ற எடுத்த முயற்சி அளப்பறியது"
இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்கு ஒரு வருடத்திற்கு முன்பே, அதாவது இஸ்லாத்தை பற்றி படித்துக்கொண்டிருந்த போதே, மது அருந்துவதை நிறுத்தி விட்டார்.
"இஸ்லாம் என் வாழ்க்கையில் ஒரு அர்த்தத்தை தந்துவிட்டது. நான் மதுவை நிறுத்தி விட்டேன். இனி தொலைப்பேசியின் பக்கத்தில் அமர்ந்து கொண்டு, ஆண் நண்பர்களிடமிருந்து பார்ட்டிகளுக்கு செல்ல எப்போது அழைப்பு வரும் என்று எதிர்ப்பார்க்கவும் போவதில்லை"
இவருக்கு இஸ்லாத்தில் உள்ள சந்தேகங்களை களைய பெரிதும் உதவியது, பிரிட்டன் ஊடகங்களால் அடிப்படைவாதி என்றும் தீவிரவாத எண்ணங்களை உருவாக்குபவர் என்றும் சொல்லப்பட்ட பின்ஸ்பரி பார்க் (Finsbury Park Mosque, North London) மசூதியின் இமாம் அபு ஹம்சா அல்-மஸ்ரி.
"அவர் எனக்கு மிகவும் உதவியிருக்கிறார். ஒருமுறை எனக்கு அவரிடமிருந்து அழைப்பு.
சகோதரி, இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதற்காக வாழ்த்துக்கள்.
இல்லை இல்லை, நான் இன்னும் தெரிந்துக்கொள்ளவேண்டியது இருக்கிறது.
அப்படியா, ஒன்றும் அவசரமில்லை, நன்றாக ஆராய்ந்து செயல்படுங்கள். உங்களுக்கு உதவி தேவையென்றால் முஸ்லிம் சமுதாயமே உங்களுக்கு உதவ தயாராக இருக்கிறது. ஆனால் ஒன்றை நினைவில் கொள்ளுங்கள், நமக்கு மரணம் எப்போது வேண்டுமென்றாலும் வரலாம். நாளையே நீங்கள் இறந்தால் நீங்கள் சேருமிடம் நரகம்தான்...
ஊடகங்களோ இவரை தவறாக சொல்கின்றன, ஆனால் இவரோ மிகவும் கண்ணியமானவராக தெரிந்தார். அவர் சொன்ன அந்த வார்த்தைகள் என்னை மிகவும் பாதித்தன.அந்த வார்த்தைகள் நான் இஸ்லாத்தை ஏற்கும்வரை என்னுள் ஒலித்துக்கொண்டிருந்தன"
யுவான் ரிட்லி அவர்கள் தான் இஸ்லாத்திற்கு வந்தவுடன் தன்னால் பின்பற்றுவதற்கு மிகவும் கடினமாக இருந்ததாக குறிப்பிட்டது ஐந்து வேலை தொழுகைகளைத்தான். இப்போது அவர் அதனை நிவர்த்தி செய்து கொண்டு விட்டார். அல்ஹம்துலில்லாஹ்
இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் பிரிட்டன் அரசுகளை கடுமையாக விமர்சிப்பவர்...
அமெரிக்காவின், தீவிரவாதத்தின் மீதான போரானது, உண்மையில் இஸ்லாத்தின் மீதான போர் என்று கூறியவர்.
தான் சிறையிலிருந்தபோது இஸ்ரேலின் உளவுத்துறை தன்னை கொல்ல சதி செய்ததாகவும், அதன்மூலம் தாலிபன்களின் மீதான போருக்கு ஆதரவு கூடுமென அவர்கள் திட்டம் தீட்டியதாகவும் கூறியவர்.
பல சமயங்களில் சகோதரி யுவான் ரிட்லி அவர்களின் வார்த்தைகள் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிடும். ஒரு முறை அவர் கூறினார்...
"கோக கோலாவை (Coca Cola) முஸ்லிம்கள் குடிப்பது நம் பாலஸ்தீனிய குழந்தைகள் மற்றும் சகோதரிகளின் ரத்தத்தை குடிப்பதற்கு ஈடாகும். இதற்கு நாம் நேரடியாக இஸ்ரேலிய ராணுவத்திடம் சென்று குண்டுகள் கொடுத்து நம் பாலஸ்தீனிய மக்களை சுடச்சொல்லலாம்"
ஆவேசமாக பேசக்கூடியவர், நகைச்சுவை உணர்வு மிக்கவர், மிகுந்த துணிச்சல்காரர்.
- அரசுகளால் தீவிரவாதிகள் என்று கூறப்படும் சிலருக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தவர்.
- ஒருமுறை சவூதி இளவரசரிடம் கைக்குலுக்க மறுத்து தன் வேலையை இழந்தவர்.
இப்படி பல சொல்லலாம்.
முஸ்லிம்களுக்கெதிரான செயல்களை கண்டித்து பல போராட்டங்களை முன்னின்று நடத்தியவர்.
ஒருமுறை "ஏன் சிலர் (Islamophobes) முஸ்லிம்களை கண்டால் பயப்படுகிறார்கள்" என்று ஒருவர் கேட்டதற்கு, "நாம் அல்லாஹ்விடம் பயப்படும்வரை அவர்கள் நம்மை பார்த்து பயந்து கொண்டுத்தான் இருப்பார்கள் (They will fear us until we fear Allah(swt))" என்று கூறியவர்.
மேலும் "ஏனென்றால், நாம் அல்லாஹ்விடம் பயப்படும்வரை, நமக்கு மது தேவையில்லை, பார்ட்டிகள் தேவையில்லை, பப்புகள் (pub) தேவையில்லை, இப்படி அவர்கள் வியாபாரத்தை பெருக்ககூடிய பல நமக்கு தேவையில்லை. இதனால் தான் பயப்படுகிறார்கள்"
மேலும் "ஏனென்றால், நாம் அல்லாஹ்விடம் பயப்படும்வரை, நமக்கு மது தேவையில்லை, பார்ட்டிகள் தேவையில்லை, பப்புகள் (pub) தேவையில்லை, இப்படி அவர்கள் வியாபாரத்தை பெருக்ககூடிய பல நமக்கு தேவையில்லை. இதனால் தான் பயப்படுகிறார்கள்"
தன்னை மிகுந்த நெகிழ்ச்சி அடையச்செய்த ஒரு நிகழ்ச்சியாக அவர் கூறியது...
"எனக்கு இறைவன் ஹஜ் செய்யக்கூடிய பாக்கியத்தை நான் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட சில வருடங்களிலேயே கொடுத்தான். ஒருமுறை தொழுகைக்கு தாமதமாகிவிட்டது. பாங்கு சொல்லிவிட்டார்கள். நான் அவசர அவசரமாக ஓடுகிறேன், அங்கே சென்றால் என்னைப்போல பலரும் தாமதம். நாங்கள் எல்லோரும் முட்டிமோதி கொண்டிருக்கிறோம் பள்ளிவாயிளுக்குள் நுழைய. ஒரே குழப்பம்.
அப்போது தக்பீர் சொல்லப்பட்டது. நான் என் தொழுகை விரிப்பை சாலையிலேயே விரித்து விட்டேன். அப்போது பார்க்கிறேன் என் முன்னும் , பின்னும் ஆயிரக்கணக்கான மக்கள், மிக அழகாக வரிசையில் நின்றுக்கொண்டிருந்தார்கள், மிக அதிக ஒழுக்கத்துடன். சில நொடிகளுக்கு முன் குழப்பங்களுடன் இருந்த இடமா இது?
நான் சொல்லுகிறேன், உலகில் எந்த ஒரு ராணுவமும் இப்படி ஒரு ஒழுங்கை ஒருசில நொடிகளில் கொண்டுவரமுடியாது. பாருங்கள் என் குடும்பத்தை, இதுதான் எங்கள் ஒற்றுமை, இதுதான் எங்கள் சகோதரத்துவம்.
இந்த சகோதரத்துவத்தை நாம் என்றென்றும் கடைப்பிடித்திருந்தால், இன்று அவர்கள் நம் நாடுகளை நெருங்கியிருக்க மாட்டார்கள். நம் சகோதரர்களை கொடுமைப்படுத்த மாட்டார்கள்"
ஹிஜாப்பைப் பற்றி இவர் சொல்ல கேட்கனுமே...அடடா...
"ஹிஜாப் எங்கள் உரிமை. நான் முஸ்லிமென்பதை காட்டுகிறது. என்னிடம் மதுவை நீட்டவேண்டாம் என்று சொல்கிறது, என்னிடம் தவறான பேச்சுக்களை பேச வேண்டாம் என்று சொல்கிறது. இது ஏன் இவர்கள் கண்களை உறுத்துகிறது? என் பண்புகளை பார்த்து இவர்கள் என்னை மதிக்கட்டும், என் உடைகளை பார்த்தல்ல. அப்படி என் உடைதான் இவர்களுக்கு முக்கியம் என்றால் அவர்கள் நட்பு எனக்கு தேவையில்லை. ஹிஜாப் அணியாத முஸ்லிம் பெண்கள், ஹிஜாப் அணியாததற்கு எந்த ஒரு ஆதரவையும் என்னிடம் எதிர்ப்பார்க்க வேண்டாம்"
ஒருமுறை ஒரு நாட்டில் நடந்த கலந்துரையாடலில், ஒரு பெண் இவரிடம்,
"இந்த நாடு தான் மிகுந்த வெப்பமுள்ள நாடாயிற்றே...இங்கேயும் நீங்கள் ஏன் ஹிஜாப் அணிந்திருக்கிறீர்கள்?" என்று கேட்டதற்கு,
சகோதரி யுவான் ரிட்லி அவர்கள் சொன்ன பதில், "நரகம் இதைவிட வெப்பமாய் இருக்கும், பரவாயில்லையா?" என்பது...
இறைவன், தான் நாடியவர்களை இஸ்லாத்தின்பால் அழைத்து வரும் ஒவ்வொரு விதமும் வியப்பைத் தருகின்றன. அவர்களின் மூலம் அவன் நிறைவேற்றும் காரியங்களும் நம் கற்பனைக்கெட்டாதவை. எல்லாப் புகழும் இறைவனிற்கே...
சமீபத்தில் நான் கண்டு வியந்த மற்றுமொருவர் சகோதரர் ஜோஷுவா எவன்ஸ் (Br.Joshua Evans) அவர்கள். இவருடைய "How the Bible led me to Islam" என்ற வீடியோவை பாருங்கள், யு டியுப்பில் கிடைக்கிறது. இவர்களைப் போன்றவர்களை பார்க்கும் போதெல்லாம் என்னிடம் பல கேள்விகள் எழுகின்றன. அவற்றில் முக்கியமான கேள்வி "Did I took Islam for Granted?" என்பதுதான்...
யுவான் ரிட்லி அவர்களுக்கு தற்போதிருக்கும் ஒரு மிகப்பெரும் ஆசை, தன் மகள் டைசி (Daisy) இஸ்லாத்தின்பால் வரவேண்டும் என்பதுதான்.
"ஆம், அவள் வந்தால் நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன். ஆனால் அவளாக வரவேண்டும்"
ஒருமுறை யுவான் ரிட்லி அவர்கள் மிக அழகாக சொன்னது...
"இஸ்லாத்தில், இறைநம்பிக்கையை வைத்தே ஒருவர் உயர்நிலையை அடைய முடியும், அழகினாலோ, வைத்திருக்கும் பணத்தினாலோ, பதவியினாலோ அல்ல"
அவர் சொன்ன இந்த குரானின் அர்த்தங்கள் நம்மிடம் என்னென்றும் இருக்க வேண்டும், நிலைக்க வேண்டும்.
இறைவன் நம் எல்லோருக்கும் நல்வழி காட்டுவானாக...ஆமின்
அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்...
References:
1. Sister Yvonne Ridley's Speech at Reverts Meeting, New Zealand, 2005
2. Sister Yvonne Ridley's Interview at "The Hour", Canadian Broadcasting Corporation TV
2. Sister Yvonne Ridley's Interview at "The Hour", Canadian Broadcasting Corporation TV
3. Sister Yvonne Ridley's interview with BBC, dated 21st Spetember 2004.
4. Sister Yvonne Ridley's Interview with Rachel Cooke, The Guardian dated 6th July 2008.
5. How I come to love the Veil, interview with Sister Yvonne Ridley, The Washington Post dated Oct 22, 2006
4. Sister Yvonne Ridley's Interview with Rachel Cooke, The Guardian dated 6th July 2008.
5. How I come to love the Veil, interview with Sister Yvonne Ridley, The Washington Post dated Oct 22, 2006
Aug 2, 2011
"இஸ்லாமை ஏற்கும் பெண்களின் எண்ணிக்கை உயருகின்றது"
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...
உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்.
இஸ்லாத்திற்கு எதிராக வைக்கப்படும் வாதங்களில் முக்கியமானது "Islam Oppresses Women"என்பது. இஸ்லாத்திற்கு எதிரான வாதங்கள் எப்படி ஒன்றுமில்லாமல் ஆகின்றனவோ அது போல தான் இந்த வாதமும் காணாமல் போகின்றது.
இஸ்லாத்திற்கெதிரான இந்த பிரச்சாரம் இஸ்லாமிய சகோதரிகளிடையே சிறிய அளவிலான பாதிப்பையாவது ஏற்படுத்தி இருக்கின்றதா என்று தெரியவில்லை. ஆனால் முஸ்லிமல்லாத சகோதரிகளை "இஸ்லாம் என்றால் என்ன?" என்று அறிய தூண்டியிருக்கின்றது. பிரிட்டனில் இஸ்லாமை வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டோரில் பெரும்பாலானோர் பெண்கள்.
இஸ்லாம் பெண்களை அடிமைப்படுத்துகின்றது என்ற பிரச்சாரம் எடுபட்டதில்லை என்பதொடு மட்டுமல்லாமல் பல சகோதரிகளை நம் மார்க்க சகோதரிகளாக கொடுத்திருக்கின்றது இந்த பிரச்சாரம். அந்த வகையில் இந்த பிரச்சாரத்தை மேற்கொள்வோர் நமக்கு மிகப்பெரும் உதவி புரிகின்றனர் என்றால் அது மிகையாகாது.
சுமார் ஐந்து மாதங்களுக்கு முன் "டைம்ஸ் ஆன்லைன்" இணையதளம் இஸ்லாத்தை தழுவும் பிரிட்டன் இளைஞிகள் பற்றிய ஒரு கட்டுரையை "Young. British. Female. Muslim" என்ற தலைப்பில் வெளியிட்டிருந்தது.
அதில் பின்வரும் தகவல்களை கூறுகின்றது டைம்ஸ் ஆன்லைன்.
- பிரிட்டன் தேவாலயங்களில் வாரயிறுதி பிரார்த்தனை கூட்டங்களில் பங்கேற்போர் எண்ணிக்கை இரண்டு சதவிதத்துக்கும் கீழாக இருக்கும் நிலையில், இஸ்லாத்தை தழுவும் பெண்களின் எண்ணிக்கையோ அதிகரித்து வருகின்றது.
- லண்டன் மத்திய மசூதியில் (London Central Mosque, Regent Park) இஸ்லாத்தை தழுவும் மூவரில் இருவர் பெண்கள். அவர்களில் பெரும்பாலானோர் முப்பது வயதுக்கும் குறைந்தவர்கள்.
- இருபதுகளில் மற்றும் முப்பதுகளில் உள்ள படித்த பிரிட்டன் இளைஞிகள் இஸ்லாத்தை தழுவுவது அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன என்று கெவின் ப்ரைஸ் (Kevin Brice, Centre for Migration Policy Research, Swansea University) கூறியுள்ளார்.
இந்த கட்டுரையில் இஸ்லாமை தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்ட ஐந்து பிரிட்டன் சகோதரிகளின் கருத்துக்களையும் வெளியிட்டுள்ளது டைம்ஸ் ஆன்லைன்.
அனைத்தையும் இங்கே பதித்தால் நீண்ட பதிவாகிவிடும் என்பதால் அவர்களில் இருவருடைய கருத்துக்களை மட்டும் இங்கே காண்போம். இன்ஷா அல்லாஹ்.
அந்த கட்டுரையை முழுமையாக படிக்க விரும்புபவர்கள் இந்த பதிவின் முடிவில் கொடுக்கப்பட்டுள்ள சுட்டியை பயன்படுத்தவும்.
1. கேதரின் ஹெசெல்டின் (Catherine Heseltine)
Nursery school teacher, 31, North London
இஸ்லாத்தை தழுவ விருப்பம் இருக்கின்றதா? என்று என்னுடைய பதினாறாம் வயதில் நீங்கள் கேட்டிருந்தால் என்னுடைய பதில் "இல்லை, நன்றி" என்பதாக இருந்திருக்கும். குடிப்பது, பார்ட்டிகளுக்கு செல்வது, நண்பர்களுடன் இருப்பது என்று மகிழ்ச்சியாகவே இருந்தது.
வட லண்டனில் வளர்ந்தேன். என் வீட்டில் மதத்தை பின்பற்றியதே இல்லை. நான் எப்போதும் நினைத்ததுண்டு, மதம் என்பது பிற்போக்கானது மற்றும் (தற்காலத்துக்கு) ஒத்துவராதது என்று.
ஆனால் இவையெல்லாம் என்னுடைய வருங்கால கணவர் சையத்தை சந்திக்கும் வரைதான். அவர் என்னுடைய எண்ணங்களுக்கு சவாலாக விளங்கினார். அவர் இளைஞர், இறைவனை நம்பக்கூடியவர். அவருக்கும் மற்ற டீனேஜ் இளைஞர்களுக்கும் உள்ள வித்தியாசம் என்றால் அது அவர் மது அருந்தமாட்டார் என்பதுதான்.
ஒரு வருடம் சென்றிருக்கும், நாங்கள் உணர்ந்து கொள்ள ஆரம்பித்தோம், அவர் முஸ்லிமாகவும் நான் முஸ்லிமல்லாதவலாகவும் இருந்தால் எப்படி ஒன்று சேர்ந்து வாழ்வது?
சையத்தை சந்திக்கும் வரை என்னுடைய நம்பிக்கையை நான் கேள்வி கேட்டதில்லை. agnostic(agnostic - இவர்கள் இறைவன் இருக்கிறானென்றும் சொல்லமாட்டார்கள், இல்லையென்றும் சொல்ல மாட்டார்கள்) ஆகவே தொடர்ந்திருப்பேன்.
ஆக, ஆர்வ மிகுதியால் இஸ்லாம் குறித்த சில நூல்களை படிக்க ஆரம்பித்தேன்.
குரானின் அறிவார்ந்த விளக்கங்கள் தான் துவக்கத்தில் என்னை கவர்ந்தன. பிறகுதான் குரானின் ஆன்மீக பக்கம் என்னுள் வந்தது. குரானின் விளக்கங்களை விரும்பினேன். மேற்குலகில் சமீபத்தில் கொடுக்கப்பட்ட பெண்ணுரிமைகளை 1500 ஆண்டுகளுக்கு முன்னரே இஸ்லாம் கொடுத்திருக்கின்றது. It was a Revelation.
மதம் பற்றிய பேச்சுக்களை பேசுவதென்பது எங்கள் வீட்டில் அவ்வளவு எளிதானதல்ல. அதனால் மூன்று வருடங்கள் என்னுலேயே இஸ்லாம் குறித்த ஆர்வத்தை மறைத்து கொண்டேன். ஆனால், பல்கலைகழகத்தின் முதல் வருடத்தில், நானும் சையத்தும் திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்று முடிவெடுத்தோம். இப்போது கண்டிப்பாக என் பெற்றோரிடம் சொல்லி விடுவதென முடிவெடுத்தேன்.
என் அம்மாவின் முதல் கருத்து என்னவென்றால், "நீங்கள் ஏன் முதலில் சேர்ந்து வாழக்கூடாது?". நான் திருமணத்திற்கு அவசரப்படுவதும், இஸ்லாமிய பெண்களின் இல்ல பொறுப்புகளும் அவரை கவலைக்கொள்ள செய்தன.
ஆனால் நான் எந்த அளவு இஸ்லாத்தை தழுவுவதில் மும்முரமாக இருக்கிறேன் என்று யாருமே உணரவில்லை. ஒருமுறை என் தந்தையுடன் இரவு உணவுக்காக வெளியே சென்ற போது அவர் கூறினார், "மதுவை அருந்து. நான் சையத்திடன் சொல்ல மாட்டேன்".
நிறைய பேர், நான் இஸ்லாத்தை தழுவ நினைப்பது "சையத்தின் குடும்பத்தை திருப்தி படுத்தத்தான்" என்று நினைத்தார்களே ஒழிய, இஸ்லாம் மீதான என்னுடைய ஆர்வத்தை உணரவில்லை.
அந்த வருடத்தின் இறுதியில் நாங்கள் திருமணம் செய்து கொண்டோம். துவக்கத்தில் நான் ஹிஜாப்(முகம் மற்றும் கை மணிக்கட்டுகளை தவிர்த்து அனைத்து உடல் பாகங்களையும் மறைக்கும் விதமாக உடையணியும் முறை) அணியவில்லை. தலையில் ஒரு தொப்பியை அணிந்து கொள்வேன்.
படிப்படியாக இஸ்லாமிய எண்ண அலைகளுக்குள் வந்துவிட்டேன். என்னுடைய அறிவாற்றலை வைத்தும், நடத்தையை வைத்தும் தான் என்னை எடை போட வேண்டுமே தவிர, நான் எப்படி உடை அணிகின்றேன் என்பதை வைத்தல்ல. It was empowering.
என்னுடைய நண்பர்கள் எனக்கு துணையாக நின்றார்கள். சிலருக்கு அதிர்ச்சியாக இருந்தது, "என்ன, மது இல்லையா, drugs இல்லையா, ஆண்கள் இல்லையா? எங்களால் முடியாது"
என்னுடைய ஆண் நண்பர்களிடம் கன்னத்தில் முத்தம் கொடுப்பதை தவிர்க்க சொல்ல சில காலம் ஆனது, "மன்னிக்கவும், இது முஸ்லிம்களின் பழக்கம்"
நாட்கள் போகப்போக, என் கணவரை விட மார்க்கத்தில் மிகுந்த பற்றுள்ளவளாக மாறிவிட்டேன்.
காலப்போக்கில் என் கணவரால் குடும்பம் என்ற பொறுப்புக்குள் வர முடியவில்லை. ஏழு வருடங்களுக்கு பிறகு என்னுடைய கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றுக்கொண்டேன்.
என்னுடைய பெற்றோர்களிடம் திரும்ப சென்ற போது, என்னை பார்த்தவர்கள் ஆச்சர்யம் தெரிவித்தார்கள், நான் ஏன் இன்னும் அந்த தலையை மறைக்கும் துணியை அணிந்திருக்கின்றேனென்று. ஆனால் நான் தனியாக இருந்தது என்னுடைய நம்பிக்கையை மேலும் வலுவாக்கியது.
இஸ்லாம் எனக்கு திசையையும், வாழ்க்கையின் அர்த்தத்தையும் கொடுத்திருக்கின்றது.
முஸ்லிம் பொது பிரச்சனைகள் குழுவில் (Muslim Public Affairs committee) என்னை ஐக்கியப்படுத்தி கொண்டிருக்கின்றேன். இஸ்லாமிற்கு எதிராக செயல்படுபவர்களை எதிர்த்து, மசூதிகளில் பெண்களை பாரபட்சமாக நடத்துவதை எதிர்த்து, வறுமை மற்றும் பாலஸ்தீன நிலைமையை எதிர்த்து என பிரச்சாரங்களை முன்னின்று நடத்தி வருகின்றேன்.
நான் இன்னும் என்னை பிரிட்டிஷ் சமூகத்தின் அங்கமாகவே கருதுகின்றேன். அதே நேரம் நான் முஸ்லிமும் கூட. இந்த இரண்டு அடையாளங்களுக்கு நடுவே ஒத்து போக சிறிது காலம் ஆனது. நான் இப்போது இந்த இரண்டிலும் அங்கம் வகிக்கின்றேன், அதிலிருந்து என்னை யாரும் வெளியேற்றவும் முடியாது.
2. ஜோஅன் பெய்லி (Joanne Bailey)
Solicitor, 30, Bradford
நான் முதல் முறை என் அலுவலகத்திற்கு ஹிஜாப் அணிந்து சென்ற போது மிகுந்த பதற்றத்துடன் இருந்தேன். எல்லோரும் என்னைப் பார்த்து என்ன சொல்வார்கள்?. உள்ளே நுழைந்தபோது சிலர் கேட்டார்கள், "எதற்காக தலையை மறைத்திருக்கின்றீர்கள்? நீங்கள் முஸ்லிமாக இருப்பீர்கள் என்று எனக்கு தெரியாது"
நான் தெற்கு யார்க்க்ஷையரில் வளர்ந்தவள். பல்கலைக்கழகத்திற்கு செல்லும் முன் வரை ஒரு முஸ்லிமை கூட பார்த்ததாக நினைவில்லை. என்னுடைய முதல் வேலையின் போது, தனியாக நின்று சம்பாதிக்கக்கூடிய இளைஞியாக வர வேண்டுமென்று முயற்சி செய்தேன். மதுக்கூடங்கள், கடுமையான டயட், ஸாப்பிங் என்று சென்றது வாழ்க்கை. ஆனால் இது எனக்கு திருப்தியை கொடுக்கவில்லை.
2004ல், ஒரு மதிய நேரத்தில் எல்லாமே மாறிவிட்டது. ஒரு முஸ்லிம் நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன். என் கழுத்தில் இருந்த சிறிய தங்க "ஏசு சிலுவையில் அறையப்பட்ட" செயினைப் பார்த்து அவர் கேட்டார், "உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கின்றது போல?"
நான் அதனை மதத்திற்காக அணிந்திருக்கின்றேன் என்பதை காட்டிலும் பேஷனுக்காக தான் அணிந்திருந்தேன். "இல்லை நான் அப்படி நினைக்கவில்லை".
பிறகு அவர் தன்னுடைய நம்பிக்கையை பற்றி பேச ஆரம்பித்தார்.
முதலில் நான் அவரை கண்டுகொள்ளவில்லை, ஆனால் அவருடைய வார்த்தைகள் என் மனதை துளைக்க ஆரம்பித்தன. சில நாட்களுக்கு பிறகு இணையம் மூலமாக குரானை ஆர்டர் செய்தேன்.
லீட்ஸ் புதிய முஸ்லிம்கள் குழுவினரால் (Leeds New Muslims Group) நடத்தப்படும் சமூக நிகழ்ச்சிகளுக்கு செல்ல தைரியத்தை வரவழைக்க சில நாட்கள் ஆனது.
எனக்கு நினைவிருக்கின்றது, வாசலுக்கு வெளியே நின்று கொண்டு தீர்மானமில்லாத நிலையில் என்னையே கேட்டுக்கொண்டேன், "நான் இங்கே என்ன செய்து கொண்டிருக்கின்றேன்?". உள்ளே இருக்கும் பெண்கள் தலை முதல் கால் வரை கருப்பு நிற அங்கி அணிந்திருப்பர் என்று கற்பனை செய்து கொண்டேன். "25 வயது பிரிட்டன் பெண்ணான எனக்கும், உள்ளே இருக்கும் அவர்களுக்கும் என்னென்ன ஒற்றுமைகள் இருக்கும்?"
நான் உள்ளே சென்ற போது, அதிலிருந்த எவரும் நாம் அடிக்கடி கேள்விப்படும் "அடிமைப்படுத்தப்பட்ட முஸ்லிம் குடும்பத்தலைவி" என்ற வட்டத்திற்குள் வரவில்லை (none of them fitted the stereotype of the oppressed Muslim housewife). அவர்கள் மருத்துவர்களாக, ஆசிரியர்களாக, உளவியல் நிபுணர்களாக இருந்தனர்.
அவர்கள் மனநிறைவுடனும், பாதுகாப்புடனும் காணப்பட்டார்கள். இது என்னை மிகவும் கவர்ந்தது. நான் எந்த புத்தகத்தை படித்ததை காட்டிலும், இந்த பெண்களுடனான சந்திப்பு என்னை மிகவும் திருப்திபடுத்தியது.
பிறகு, நான்கு வருடங்கள் கழித்து, 2008ல் ஒரு நண்பரது வீட்டில் இஸ்லாத்தை தழுவினேன். முதலில், நான் சரியான முடிவை எடுத்திருக்கின்றேனா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் விரைவில் அதிலிருந்து விடுபட்டு விட்டேன்.
சில மாதங்களுக்கு பின்னர் என் பெற்றோரிடம் இது குறித்து சொல்ல வேண்டுமென்று உட்கார்ந்தேன்.
"நான் உங்களிடம் ஒன்று சொல்லவேண்டும்".
சிறிது நேரம் அமைதி...என் தாய் கூறினார்.
"நீ முஸ்லிமாக போகின்றாய், அப்படித்தானே?".
கண்ணீர் விட்டு அழுதார், கேள்விகளாய் கேட்டார்.
"திருமணமான பிறகு எப்படி இருப்பாய்? நீ இப்படி உடையணிந்து தான் ஆக வேண்டுமா? உன்னுடைய வேலை என்னவாகும்?.
அவர் என்னைப்பற்றி அதிகம் கவலைப்பட்டார். நான் அவரிடம் மறுபடியும் வாக்களித்தேன், நான் நானாகவே இருப்பேனென்று.
நிறைய மக்கள் நினைப்பது போல, இஸ்லாம் என்னை அடிமைப்படுத்தவில்லை, நான் நானாகவே இருக்க அனுமதிக்கின்றது.
நான் இப்போது மிகுந்த மனநிறைவுடன் உள்ளேன். சில மாதங்களுக்கு முன், ஒரு முஸ்லிம் வழக்குரைஞருடன் எனக்கு திருமணம் நிச்சயமானது. அவருக்கு நான் வேலைக்கு செல்வதில் எந்தவொரு பிரச்சனையும் இல்லை. அதே நேரம் இஸ்லாமிய பார்வையிலான ஆண் பெண் பொறுப்புகளை ஆமோதிக்கின்றேன். என்னுடைய கணவர் மற்றும் குழந்தைகளை கவனித்து கொள்ள விரும்புகின்றேன். அதே நேரம் என்னுடைய சுதந்திரத்தையும் விரும்புகின்றேன்.
நான் ஒரு பிரிட்டிஷ் என்பதிலும், முஸ்லிம் என்பதிலும் பெருமை கொள்கிறேன். எந்த வழியிலும் இவை இரண்டிற்குமிடையே முரண்பாடு இருப்பதாக நான் நினைத்ததில்லை.
அல்ஹம்துலில்லாஹ். எல்லாப் புகழும் இறைவனிற்கே....
பிரிட்டிஷ் கலாச்சார பின்னணியில் நம்மை வைத்து பார்த்தால் இந்த சகோதரிகள் கடந்து வந்த பாதை நமக்கு தெளிவாக புலப்படும்.
டைம்ஸ் ஆன்லைனின் இந்த பதிவில் என்னை திணறடித்தது அகீலா லிண்ட்சே வீலர் என்ற சகோதரியின் கருத்து.
"The first time I tried on the hijab, I remember sitting in front of the mirror, thinking, ‘What am I doing putting a piece of cloth over my head? I look crazy!’ Now I’d feel naked without it and only occasionally daydream about feeling the wind blow through my hair" - Aqeela Lindsay Wheeler, Housewife and mother, 26, Leicester.
முதலில் நான் ஹிஜாபை அணிந்த போது, கண்ணாடியை பார்த்து என்னையே கேட்டு கொள்வேன், "ஒரு துணியை என் தலையை சுற்றி கட்டுவதால் நான் என்ன பண்ணுகின்றேன்? I look Crazy!". ஆனால் இப்போதோ ஹிஜாப் அணியாமல் இருப்பதை நிர்வாணமாக இருப்பது போல உணர்கின்றேன் --- (extract from the original quote of) Aqeela Lindsay Wheeler, Housewife and mother, 26, Leicester.
ஆக, எந்த ஹிஜாபை நோக்கி அதிக விமர்சனங்கள் வைக்கப்படுகின்றதோ, அதனை விரும்பி அணியும் பெண்களாகத் தான் இவர்கள் இருக்கின்றார்கள்.
இஸ்லாம் தங்களுக்கு மனநிறைவையும், பாதுகாப்பையும், திசையையும், உரிமைகளையும் கொடுத்திருப்பதாக கூறுகின்றனர்.
ஒருபுறம், இஸ்லாம் பெண்களை அடிமைப்படுத்துகின்றது, அடக்கியாள்கின்றது என்ற பிரச்சாரம். மறுபுறம், டைம்ஸ் இணையதளம் சொல்லுவது போல ஆயிரக்கணக்கில் இஸ்லாமிற்குள் நுழையும் சகோதரிகள்.
இஸ்லாமை நன்கு ஆராய்ந்து அதனுள் தங்களை இணைத்து கொண்டிருக்கும் சகோதரிகளின் கருத்து சரியா?, அல்லது, இஸ்லாமிற்கு வெளியே நின்று கொண்டு இஸ்லாம் பெண்களை இப்படி நடத்துகின்றது, அப்படி நடத்துகின்றது என்று கூப்பாடு போடுபவர்களின் கருத்து சரியா?
இறைவன் நம் அனைவரையும் என்றென்றும் நேர்வழியில் செலுத்துவானாக...ஆமின்.
அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்.
Please note:
சகோதரிகளின் கருத்துக்கள் வார்த்தைக்கு வார்த்தை மொழிப்பெயர்க்கப்படவில்லை.
My Sincere Thanks to:
1. The Times.
Reference:
Subscribe to:
Posts (Atom)
About Me
Blog Archive
-
▼
2011
(105)
-
▼
August
(19)
- மட்டக்களப்பில் மர்மமனிதர்களின் நடமாட்டம்-காவலரணை அ...
- மலசலகூடத்துள் மறைந்திருந்த மர்ம மனிதர்: பெண் மீது ...
- கிண்ணியாவில் முறுகல், காவல்துறை ஜீப் எரிப்பு - காய...
- பொத்துவிலில் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் பலிய...
- கிரீஸ் மனிதர்களின் அட்டகாசமும் சிவில் சமூக அவதானமு...
- மர்ம மனிதன் சம்மாந்துறையில் நடந்தது என்ன?
- வாழைச்சேனை மர்ம மனிதனை இஸ்லாமிய நீதிமன்றத்தில் ஒப்...
- மர்ம மனிதனால் ஓட்டமாவடியில் போலீஸ் பொதுமக்கள் மோதல்
- மர்மமனிதர்கள்:பாழடைந்த வீட்டினுள் பொலிஸாரின் சீருட...
- மர்ம மனிதனால் தாக்கப்பட்டுள்ள பெண்
- யுவான் ரிட்லி - துணிச்சலின் மறு பெயர்
- "இஸ்லாமை ஏற்கும் பெண்களின் எண்ணிக்கை உயருகின்றது"
- யூசுப் எஸ்டஸ்...
- நபிவழித் திருமணத்தில் சோதனைகளா?
- 'என் மகள்களின் மூன்று கேள்விகள்'
- ஆஸ்திரேலிய பேருந்துகளில் இஸ்லாமிய விளம்பரங்கள்...
- நார்வே தாக்குதல் – ஊடக அதர்மம்
- "பாலஸ்தீன் அரபுகளுக்கே சொந்தம்" - மகாத்மா காந்தி!
- தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வீர்ர் வெய்ன் பர்னெல் ...
-
▼
August
(19)
Cyber. Powered by Blogger.



