மட்டக்களப்பு புதுநகரில் நேற்றிரவு நடமாடிய மர்ம மனிதர்களை அப்பகுதி பொது மக்கள் துரத்திச் சென்ற போது அவர்கள் சேத்துக்குடா காவலரணுக்குள் புகுந்ததாகத் தெரிவித்து இன்று காலை புதூர் விமான நிலையத்துக்கு அருகில் அப்பகுதி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மர்மமனிதர்களாக நடமாடி மக்களை அச்சுறுத்தி வருபவர்கள் இராணுவத்தினரும், காவல்துறையினருமே என குற்றம் சாட்டியதுடன் இவர்களின் முகாம்களை உடனடியாக அகற்றி தங்களை நிம்மதியாக வாழ விட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.தற்போது மாணவர்களுக்கான உயர்தரப்பரீட்சை இடம்பெறுகின்ற நிலையில் மாணவர்களை பரீட்சைக்குத் தயார்படுத்த முடியாத அளவுக்கு இந்த மர்ம மனிதர் பிரச்சினை பாரிய சிக்கலை ஏற்படுத்தி வருவதாகவும், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாரிய அளவில் உளரீதியான பாதிக்கப்பட்டிருப்பதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். தாம் வெளியில் நடமாட முடியாத அளவிற்கு அச்சம் அடைந்திருப்பதாக அங்கு கூடியிருந்த பெண்கள் தெரிவித்தனர்.தங்களது கிராமங்களுக்குள் நுழையும், மர்ம மனிதர்கள் விமான நிலையம், மற்றும் சேத்துக்குடா காவல் அரண் போன்ற பகுதிகளுக்குள்ளே தப்பிச் செல்வதாக அக்கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஊரின் மத்தியில் அமைந்துள்ள சேத்துக்குடா பொலிஸ் காவல் அரணை உடனடியாக அகற்றுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் வீதிகளில் ரயர்களை எரித்து வீதித்தடையை ஏற்படுத்தினர், இதனால் மட்டக்களப்பு நகருக்கும் படுவான்கரைக்குமான போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.இன்று காலையில் மட்டக்களப்பு நகரிலிருந்து படுவான்கரைக்கு சென்ற அரச ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் இந்த ஆர்ப்பாட்டத்தால் தமது பயணத்தை தொடரமுடியாது திரும்பி வந்தனர்.படுவான்கரையிலிருந்து வந்த மக்களுக்கும் மட்டக்களப்பு நகருக்குள் நுழைய முடியாத நிலையில் தமது ஊர்களுக்கு திரும்பி சென்றனர்.பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதை அறிந்த மட்டக்களப்பு மாநகர முதல்வர் சிவகீதா பிரபாகரன், மண்முனைப்பற்று பிரதேச சபைத் தவிசாளர் சசிதரன் கிரிஸ்ரினா, வவுணதீவு பிரதேச சபை உறுப்பினர் கே.விமலநாதன், மாநகர சபை உறுப்பினர் கிருபைராஜா உட்பட பலரும் அங்கு வந்து மக்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.Blog Archive
-
▼
2011
(105)
-
▼
August
(19)
- மட்டக்களப்பில் மர்மமனிதர்களின் நடமாட்டம்-காவலரணை அ...
- மலசலகூடத்துள் மறைந்திருந்த மர்ம மனிதர்: பெண் மீது ...
- கிண்ணியாவில் முறுகல், காவல்துறை ஜீப் எரிப்பு - காய...
- பொத்துவிலில் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் பலிய...
- கிரீஸ் மனிதர்களின் அட்டகாசமும் சிவில் சமூக அவதானமு...
- மர்ம மனிதன் சம்மாந்துறையில் நடந்தது என்ன?
- வாழைச்சேனை மர்ம மனிதனை இஸ்லாமிய நீதிமன்றத்தில் ஒப்...
- மர்ம மனிதனால் ஓட்டமாவடியில் போலீஸ் பொதுமக்கள் மோதல்
- மர்மமனிதர்கள்:பாழடைந்த வீட்டினுள் பொலிஸாரின் சீருட...
- மர்ம மனிதனால் தாக்கப்பட்டுள்ள பெண்
- யுவான் ரிட்லி - துணிச்சலின் மறு பெயர்
- "இஸ்லாமை ஏற்கும் பெண்களின் எண்ணிக்கை உயருகின்றது"
- யூசுப் எஸ்டஸ்...
- நபிவழித் திருமணத்தில் சோதனைகளா?
- 'என் மகள்களின் மூன்று கேள்விகள்'
- ஆஸ்திரேலிய பேருந்துகளில் இஸ்லாமிய விளம்பரங்கள்...
- நார்வே தாக்குதல் – ஊடக அதர்மம்
- "பாலஸ்தீன் அரபுகளுக்கே சொந்தம்" - மகாத்மா காந்தி!
- தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வீர்ர் வெய்ன் பர்னெல் ...
-
▼
August
(19)
Cyber. Powered by Blogger.
