ஓட்டமாவடி வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவில் மர்ம மனிதன் என்று தெரிவிக்கப்படும் நபர் ஒருவனை பொது மக்கள் பிடித்து போலீசிடம் ஒப்படைத்துள்ளனர் அந்த நபரை போலீசார் விடுவித்துள்ளனர் என்ற வதந்தி பரவியதை அடுத்து பொது மக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் இருபத்தைந்து பொலிஸார் மற்றும் நான்கு பொது மக்களும் காயப்பட்டுள்ளனர் என்று கல்குடா முஸ்லிம் தெரிவிக்கின்றது.
அந்த செய்தியில் இன்று ஓட்டமாவடியில் காலை கேணி நகர் கிராமத்தில் உசனார் மர்சூக்கா எனும் இரண்டு பிள்ளைகளின் தாய் மர்ம மனிதன் என்று தெரிவிக்கபடும் நபரினால் தாக்கப்பட்டு வாழைச்சேனை வைத்தியசாலையில் படங்கள் சிகிச்சை பெற்று வருகின்றார் என்றும்
குறித்த பெண்ணை ஊசி போன்ற ஊறிய ஆயுதத்தால் தாக்கியதாக தெரிவிக்கப்படும் நபரை பொது மக்கள் பிடித்து தாக்கிய பின்னர் வாழைச்சேனை பொலிஸாரிடம் ஒப்படைத்த போது பொலிஸார் அவரை விட்டு விட்டார்கள் என்ற வதந்தி பரவியதால் பொது மக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் அந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது
ஓட்டமாவடியில் ஏற்பட்ட கலவரத்தின் போது பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டிக்கு இலக்காகி மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட முகம்மது கனீபா முகம்மது காலிதீன் அவர்கள் தற்போது மட்டக்களப்பு மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார் என்றும் .
இக்கலவரத்தின் போது படுகாயமடைந்த மற்றய நபரான எம்.எப்.எம்.பாறூக் அவர்கள் மட்டக்களப்பு மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். தற்போது அவர் சீடி ஸ்கேன் பரிசோதனைக்கு உட்படுத்தவும் அவச சிகிச்சை மேற்கொள்ளவும் என கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்று அந்த தகவல் தெரிவிக்கின்றது.
மேலும் அந்த தகவலில் மர்ம மனிதன் பற்றிய செய்தியால் சில தினங்களாக மட்டக்களப்பு எல்லைக் கிராமங்களான ரிதிதன்ன, ஜெயந்தியாய பகுதிகளிலும் வெலிகந்தைப் பகுதியில் கட்டுவன்வில, செவனபிட்டி பகுதியிலும் மக்கள் பீதியடைந்திருந்தனர். நேற்று ஓட்டமாவடிப் பகுதியில் நாவலடி, கேணிநகர், அமீரலி கிராமம், பாலை நகர் போன்ற எல்லைப் புற கிராமங்களிலிருந்து மக்கள் தற்காப்பிற்காக அங்கிருந்து வெளியேறி பிற பகுதிகளுக்கு சென்றிருந்தனர். ஆண்கள் மாத்திரம் காவலுக்கு இரவு நேரங்களில் தங்கியிருந்தனர் என்றும் அந்த தகவல் தெரிவிக்கின்றது .
தற்போதைய தகவலின் படி அங்கு நிலைமை வழமைக்கு திரும்பியுள்ளதாகவும் போக்குவரத்துக்கு வழமைபோன்று இடம்பெறுவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றது அதேவேளை இன்று ஏற்பட்ட அசாதாரண நிலையை அடுத்து வழமையாக இரவு 08.30 மணிக்கு நடைபெற்ற தராவீஹ் தொழுகை இரவு 08.00 மணிக்கு நடைபெறும் என வாழைச்சேனை முகைதீன் ஜூம்ஆப் பள்ளிவாயல் அறிவித்துள்ளது.
