அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்களின் வாழ்க்கையையும் அதில் நாம் பெற வேண்டிய படிப்பினைகளையும் அறிவோம்.அனஸ் இப்னு மாலிக் (ரலி) பற்றி ஓர் அறிமுகம்
பெயர் : அனஸ் இப்னு மாலிக் இப்னு நழ்ர் இப்னு லம்லம் இப்னு சைத் இப்னு ஹராம் இப்னு ஜுன்துப் இப்னு ஆசிம் என்பதாகும்.
அபூ ஹம்ஸா அபூ துமாமா என்ற புனைப் பெயர் கொண்ட அன்சாரித் தோழர் ஆவார்.
தந்தையின் பெயர் : மாலிக்; இப்னு நழ்ர்
தாயின் பெயர் : உம்மு சுலைம் பின்து மில்ஹான்
மனைவியின் பெயர் : ஜைனப் பின்து நபீத்
சகோதரர்களின் பெயர் : அல் பராஉ இப்னு மாலிக், ஸைத் இப்னு மாலிக்.
சாச்சாவின் பெயர் : அனஸ் இப்னு நழ்ர்.
அறிவித்த ஹதீஸ்கள் : 2286.
ஆதாரம் : அல் அன்ஸாபு லிஸ்ஸம்ஆனிநபிகளாரின் பணிவிடையாளர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வரும் பொழுது, அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்களுக்கு பத்து வயதாக இருந்தது. அவரது தாயாராகிய உம்மு சுலைம் அவர்களே அனஸ் (ரலி) அவர்களை சிறு வயதிலே நபிகளாருக்கு பணி விடை செய்வதற்காக ஒப்படைத்து விட்டார்கள். அனஸ் (ரலி) அவர்களும் நபி (ஸல்) அவர்களுக்கு பத்து ஆண்டுகள் பணிவிடையாளராக இருந்தார்கள்.
அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்:நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வந்த போது நான் பத்து வயதுடையவனாக இருந்தேன். என் தாயும் தாயின் சகோதரிகளும் என்னை நபி (ஸல்) அவர்களுக்கு பணிவிடை செய்யுமாறு வற்புறுத்திக் கொண்டேயிருந்தார்கள். ஆகவே, நான் நபி (ஸல்) அவர்களுக்குப் பத்தாண்டு காலம் பணி விடைகள் செய்தேன்.அறிவிப்பவர் : அனஸ் ரலி அவர்கள். நூல் : புகாரி(5166)
நபிகளாரின் பிhர்த்தனையைப் பெற்ற நபித் தோழர்நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் துஆவைப் பெற்ற நபித் தோழர்கள் ஏராளம் இருக்கின்றனர். அந்த பாக்கியத்தை பெற்றவர்களில் உள்ளவர் தான் அனஸ் இப்னு மாலிக் ஆவார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிரார்தனையால் தான்; அனஸ் (ரலி) அவர்கள் அன்ஸாரிகளிலே மிகவும் செல்வந்தம் உடையவராகவும் அதிக குழந்தைகள் உடையவராகவும் காணப்பட்டார்கள். இதை பின் வரும் நபி மொழிகள் சொல்கின்றன.நபி (ஸல்) அவர்கள் உம்மு சுலைம் (ரலி) அவர்களிடம் சென்றார்கள். அவர்கள் பேரீச்சம் பழங்களையும் நெய்யையும் நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வந்தார்கள்.
உங்கள் நெய்யை அதற்குரிய பாத்திரத்திலயே ஊற்றுங்கள். பேரீச்சம் பழங்களை அதற்குரிய பையிலே போடுங்கள். ஏனெனில், நான் நோன்பு வைத்திருக்கிறேன் என்று நபி ஸல் கூறினார்கள். பிறகு வீட்டின் ஒரு மூலையில் நின்று கடமையல்லாத தொழுகையை தொழுதார்கள். உம்மு சுலைம் அவர்களுக்காகவும் அவரது குடும்பத்திற்காகவும் பிரார்த்தனை செய்தார்கள். அல்லாஹ்வின் தூதரே எனக்கு விருப்பமான ஒன்று உள்ளது என்று உம்மு சுலைம் (ரலி) அவர்கள் கூறினார்கள். அது என்ன என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். உங்கள் பணிவிடையாளர் அனஸ் தான் என்றார்கள். இம்மை மறுமையின் எந்த நன்மையையும் விட்டு விடாமல் நபி (ஸல்) அவர்கள் எனக்காக பிராதித்தார்கள். இறைவா! இவருக்கு பொருட் செல்வத்தையும் குழந்தைச் செல்வத்தையும் வழங்குவாயாக! அதிலே இவருக்கு அருள் வளம் புரிவாயாக! என்று பிரார்த்தித்தார்கள். இன்று நான் அன்ஸாரிகளிலேயே செல்வந்தனாக இருக்கிறேன்.அறிவிப்பவர் : அனஸ் இப்னு மாலிக் அவர்கள். நூல் : (1982).
ரகசியம் காத்த நபித் தோழர்நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ரகசியத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று வழியுறுத்தி பல செய்திகளைக் கூறியுள்ளார்கள். ரகசியம் என்பது ஓர் அமானத் ஆகும். அதை பாதுகாக்காமல் இருந்தால் அது நயவஞ்சகத்தின் ஓர் அடையாளம் என பல நபி மொழிகள் உள்ளன. ஆனால், அதிகமான முஸ்லிம்கள் இதனை பேணுவதில் மிகவும் அலட்சியம் உடையவர்களாக் காணப்படுகின்றார்கள். ஆனால், அனஸ் (ரலி) அவர்களோ சிறு வயதிலயே இந்த நபி வழியை நூல் பிடித்து பின் பற்றக் கூடியவராக இருந்தார்கள். எந்த அளவிற்கு என்றால், தன்னுடைய தாயும் நண்பனும் கேட்டுக் கூட நபிகளாரின் ரகசியத்தை வெளிப்படுத்தாதவராக இருந்தார்கள் என்பதை பின் வரும் நபி மொழி சொல்கின்றது.நான் சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள்.
எங்களுக்கு ஸலாம் சொன்னார்கள். பிறகு என்னை ஓர் அலுவலாக அனுப்பிவைத்தார்கள். நான் என் தாயாரிடம் தாமதமாக வந்தேன் நான் (வீட்டுக்கு)வந்த போது என் தாயார் உன் தாமதத்திற்கு என்ன காரணம்? என்று கேட்டார்கள். நான் இறைத் தூதர் (ஸல்) அவர்கள் ஓர் அலுவலுக்காக என்னை அனுப்பிவைத்தார்கள் என்று கூறினேன்.அப்போது என் தாயார் என்ன அலுவல்? என்று கேட்டார்கள். நான் அது இரகசியம் என்று சொன்னேன்.என் தாயார் நீ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இரகசியத்தை யாரிடமும் சொல்லாதே! என்று கூறினார்கள்.இதன் அறிவிப்பாளரான ஸாபித் அல் புனானீ அவர்கள் கூறினார்கள்: (அனஸ் (ரலி) அவர்கள் இந்த ஹதீஸை என்னிடம் அறிவித்த போது) அல்லாஹ்வின் மீதாணையாக அந்த ரகசியத்தை நான் யாரிடமாவது சொல்வதாக இருந்தால் ஸாபித்தே! உங்களிடம் அதைச் சொல்லியிருப்பேன் என்று கூறினார்கள்.அறிவிப்பவர் : அனஸ் ரலி அவர்கள். நூல்: முஸ்லிம் (4891)
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:என்னிடம் நபி (ஸல்) அவர்கள் ஓர் இரகசியம் சொன்னார்கள். அவர்களுடைய இறப்புக்குப் பிறகும் கூட ஒருவரிடமும் அதை நான் தெரிவிக்கவில்லை. என்னிடம் (என் தாயார்) உம்மு சுலைம் (ரலி)அவர்கள் அது குறித்துக் கேட்டார்கள். அதை நான் அவருக்கும் தெரிவிக்கவிக்கவில்லை என்றார்கள்.அறிவிப்பவர் : அனஸ் ரலி அவர்கள். நூல்: புகாரி (6289)வணக்கத்தில் சிறந்தவர்அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள்
வணக்கங்களை சிறு வயதிலேயே சிறந்த முறையில் நிறைவேற்றக் கூடியவராக காணப்பட்டார்கள். எந்த அளவிற்கு என்றால், அனஸ் (ரலி) அவர்களோடு இருந்த சில நபித் தோழர்களே இவரின் தொழுகையைப் பற்றி பாராட்டிச் சொல்லியிருக்கிறார்கள்.அப+ஹ{ரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்: உம்மு சுலைம் அவர்களின் மகனாகிய அனஸ் இப்னு மாலிக் அவர்களைத் தவிர நபிகளாரின் தொழுகையைப் போன்று தொழக் கூடிய எவரையும நான்; பார்த்ததில்லை.அனஸ் இப்னு சீரீன் அவர்கள் கூறினார்கள்: அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் பயணம் செல்பவராகவோ அல்லது ஊரில் இருந்தாலோ தொழுகையை சிறந்த முறையில் நிறைவேற்றக் கூடியவராக இருந்தார்கள்.இன்று நாம் எத்தனையோ நபர்கள் ஊரில் இருக்கும் பொழுது கூட பாங்கு சொன்னால் பள்ளிக்குச் சென்று தொழுகையை நிறை வேற்றாமல் பாழ்படுத்தி விடுகின்றோம். அதற்காக வேண்டி சிறிது கூட நம்முடைய உள்ளம் உறுத்துவதும் கிடையாது.
நாம் கவலைப் பட்டதும் கிடையாது. இவருடைய வாழ்க்கையை படிப்பதோடு நிறுத்தி விடாமல் அதில் நாம் படிப்பினை பெற வேண்டும்.
