May 8, 2011

ஜிமெயிலின் பயனுள்ள புதிய வசதி: 25000 முகவரிகள் வரை சேமிக்க

 ஜிமெயில் இன்று உலகில் உள்ள அனைவராலும் பயன்படுத்தப்படும் ஒரு மின்னஞ்சல் சேவை நிறுவனமாகும்.
இந்த நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு தினம் தினம் புதுப்புது வசதிகளை அறிமுகப்படுத்தி அதன் வாசகர்களை மேலும் அதிகரித்து கொள்கிறது.
இதில் சுயநலம் இருந்தாலும் அதனை பயன்படுத்தும் பெரும்பாலனவர்களுக்கும் இந்த வசதி பயன்படுவதால் ஜிமெயில் சேவை பாராட்டுக்குரியதே. சமீபத்தில் தான் இந்த முறையில் மேலும் ஒரு பயனுள்ள வசதியை நமக்கு அறிமுகப்படுதிள்ளது.
தற்போது ஜிமெயில் உபயோகிக்கும் அனைவரும் புதிய வசதிப்படி தன்னுடைய ஜிமெயில் கணக்கின் முகவரிகள் பகுதியில்(Contact Lists) 25000 முகவரிகள் வரை சேமித்து கொள்ளலாம். இதற்கு முன்னர் ஒருவரால் 10000 முகவரிகளை மட்டுமே சேமிக்க முடியும்.
அந்த அளவை தற்போது உயர்த்தி 25000 முகவரிகளை சேமித்து கொள்ளும் வசதியை ஜிமெயில் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் கூடுதலாக இன்னொரு வசதியும் இதனுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதாவது முன்பு ஒரு தனி முகவரியின் அளவு 32KB தான் இருக்க வேண்டும். இது பெரும்பாலானவர்களுக்கு போதுமானதாக இருந்தாலும் ஒரு சிலருக்கு இந்த அளவு போதவில்லை.
இதை கருத்தில் கொண்டு ஒரு தனி முகவரியின் அளவை 128KB அளவாக உயர்த்தி உள்ளது. ஆகவே அனைவரும் ஜிமெயிலின் இந்த அறிய வசதிகளை அறிந்து பயன்படுத்தி கொள்ளுங்கள்.

About Me

My photo
Share the information which attract me.

image

Lorem ipsum dolor sit

Aliquam sit amet urna quis quam ornare pretium. Cras pellentesque interdum nibh non tristique. Pellentesque et velit non urna auctor porttitor.

image

Nunc dignissim accumsan

Vestibulum pretium convallis diam sit amet vestibulum. Etiam non est eget leo luctus bibendum. Integer pretium, odio at scelerisque congue.