- பேசும்முன் கேளுங்கள்; எழுதும்முன் யோசியுங்கள்; செலவழிக்கும்முன் சம்பாதியுங்கள்.
- சிலவேளைகளில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்.
- யாரிடம் கற்கிறோமோ அவரே நம் ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.
- நாம் மாறும்போது தானும் மாறி, நாம் தலையசைக்குபோது தானும் தலையசைக்கும் நண்பன் நமக்குத் தேவையில்லை. அதற்கு நம் நிழலே போதும்.
- நோயைவிட அச்சமே அதிகம் கொல்லும்.
- நான் குறித்த நேரத்திற்குக் கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை மனிதனாக்கியது.
- நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை ஒப்புக்கொள்கிறோம்!
- வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.
- சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஓராண்டு இழப்பு. திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.
- முழுமையானவன் இன்னும் பிறக்கவில்லை; இனியும் பிறக்க மாட்டான்.
- பரபரத்து ஓடுவதில் பயனில்லை; உரிய நேரத்தில் புறப்படுங்கள்.
- எல்லோரையும் நேசிப்பது சிரமம்தான்; ஆனால் பழகிக்கொள்ளுங்கள்.
- நல்லவர்களோடு நட்பாயிருங்கள்; நீங்களும் நல்லவனாகலாம்.
- காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை; ஆனால் கோபத்தின் காரணம் பெரும்பாலும் நல்லதாய் இருப்பதில்லை.
- விந்தையான சிலரைப் பார்க்கும்போது இவர்கள் ஏன் இப்படி? என்பதைவிட, இவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொள்ளுங்கள்.
- யார் சொல்வது சரி என்பதல், எது சரி என்பதே முக்கியம்.
- ஆயிரம் முறை சிந்தியுங்கள்; ஒருமுறை முடிவெடுங்கள்.
- அச்சம்தான் நம்மை அச்சுறுத்துகிறது. அச்சத்தை அப்புறப் படுத்துவோம்.
- நியாயத்தின் பொருட்டு வெளிப்படையாக எவருடனும் விவாதிப்பது சிறப்பாகும்.
- உண்மை புறப்பட ஆரம்பிக்கும்முன் பொய் பாதி உலகத்தை வலம் வந்துவிடும்.
- உண்மை தனியாகச் செல்லும்; பொய்க்குத்தான் துணை வேண்டும்
- வாழ்வதும் வாழவிடுவதும் நமது வாழ்க்கைத் தத்துவங்களாக இருக்கட்டும்.
- தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச் செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக ஏமாறிப் போகிறான்.
- உலகம் ஒரு நாடக மேடை; ஒவ்வொருவரும் தம் பங்கை நடிக்கிறார்கள்.
- செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும்; அப்போதுதான் முன்னேற முடியும்.
- அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது வெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன் பணிபுரிவர்.
- வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன், இரண்டாம் முறையும் வென்றவனாவான்.
- தோல்வி ஏற்படுவது, "அடுத்தச் செயலைக் கவனமாகச் செய்" என்பதற்கான எச்சரிக்கை.
- பிறர் நம்மைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்காமல், நாம் பிறரைச் சமாதானப்படுத்த முயல வேண்டும்.
- கடினமான செயலின் சரியான பெயர்தான் சாதனை. சாதனையின் தவறான விளக்கம்தான் கடினம்.
- ஒன்றைப்பற்றி நிச்சயமாக நம்ப வேண்டுமென்றால் எதையும் சந்தேகத்துடனே துவக்க வேண்டும்.
- சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதற்குப் பெயர்தான் கோழைத்தனம்.
- ஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச் சிந்திக்க வைக்கிறது.
May 7, 2011
சிந்தனைக்கு சில...!
About Me
Blog Archive
-
▼
2011
(105)
-
▼
May
(30)
- கணினியில் USB PORT ஐ DISABLE செய்வது எப்படி
- வரலாறு - தோழர்கள்
- அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்கும் இணையம்
- படங்கள் மற்றும் PDF கோப்புகளை Word கோப்பாக மாற்ற
- விக்கிலீக்ஸ் வெளியிடும் அனைத்து தகவல்களையும் உடனே ...
- “வானம்” படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து த.மு.மு.க ...
- "இஸ்லாமிற்கு வழிகாட்டியது பைபிள்".....
- பர்சனல் விவரங்களை சமூக வலைதளங்களில் பந்தி வைத்தால்...
- அது ஒரு காகம்! (படிப்பினை)
- மேற்கு பயங்கரவாதம் இஸ்லாமிய விஞ்ஞானத்தை ஊதி அணைக்க...
- ஆன்லைன் ஷாப்பிங் - சில எச்சரிக்கைகள்!
- பென்டிரைவ் மூலம் பரவும் வைரஸ்களைத் தடுக்க
- தரவிறக்க வேகத்தை அதிகரிக்க
- இஸ்லாமும் விஞ்ஞானமும்
- புகைப்படத்துறையின் புதிய பரிணாமம் : சொக்க வைக்கும்...
- ஜிமெயிலின் பயனுள்ள புதிய வசதி: 25000 முகவரிகள் வரை...
- ஓன்லைனில் கோப்புகளை சேமிக்க
- பின்லேடன் மீதான தாக்குதல் நேரத்தில் ஒபாமாவின் அறைய...
- இரண்டு யூதர்கள்!
- அமெரிக்காவை தாக்கிய சுழல் காற்று வியக்கவைக்கும் பு...
- இணையத்தில் இருந்த படியே அனைத்து புத்தகங்களையும் பட...
- 40 வயதிலும் இளமை நீடிக்க ஒரு இனிய தகவல்
- தனித்தனி வீடியோக்களை எந்த மென்பொருளின் துணையும் இல...
- பவர்பாய்ண்ட் கோப்புகளை வீடியோவாக மாற்றம் செய்ய
- பின்லேடன் கொலையில் தொடரும் சந்தேகங்கள்
- சிந்தனைக்கு சில...!
- உறவுகளைப் பேணுவோம்
- செல் போன் நோய்கள் தருமா?
- நவீன அறிவியல் எழுச்சியில் முஸ்லிம்களின் பங்களிப்பு...
- சுவர்க்க இன்பங்கள் இப்படியா?
-
▼
May
(30)
Cyber. Powered by Blogger.
