May 6, 2011

சுவர்க்க இன்பங்கள் இப்படியா?

எல்லோருக்கும் சுவர்க்கம் செல்ல தான் ஆசை. அது தான் எங்கள் எல்லோரினதும் கனவு. அந்தவகையில் நாம் சுவர்க்கம் பற்றி சில தகவல்களை பார்ப்போம். சுவர்க்க இன்பங்களை பொதுவாக 4 வகையாக பிரிக்கலாம்.  
1.    சுவர்க்கத்தின் இயற்கை அழகு
2.    சுவர்க்த்தின் செயற்கை அழகு ...  
3.    மனநிம்மதியும் மனஅமைதியும் தரக் கூடியது.   
4.    மனதிருப்தி தரக் கூடியது.   

1. சுவர்க்கத்தின் இயற்கை அழகு.   
சுவர்க்கத்தின இயற்கை அழகு என்பது முடியுமானளவு உங்கள் கண் முன் இவற்றை கொண்டுவந்து பாருங்கள். அதுவே உங்களுக்கு பெரிய மகிழ்ச்சியை தரும். அழகான கடல், அழகான மலைக்காட்சி, அழகான நீர்வீழ்ச்சி, அழகான ஆறு, அழகான பசுமையான புற்தரைகள் உண்மையில் உலகத்தில் அவற்றை நாம் பார்க்கும் எங்களுக்கு தெரியாத ஒரு இன்பம் கண்குளிர்ச்சி மனக்குளிர்ச்சி என்பவை நமக்கு உண்டாகும் அதை அனுபவித்த அனுபவம் நம் எல்லோருக்கும் இருக்கும். பெரும்பாலும் சுற்றுலாக்கள் செல்வது இதற்காகவே அழகான இடங்களை பார்த்து ஒரு கண் குளிர்ச்சி ஒரு இன்பத்தை பெற்றுவர. அதே போல் தான் சுவர்க்கம் அவற்றை விட பல மடங்கு இன்பத்தையும் உணர்வையும் நமக்கு தரக்கூடியது சுவர்க்க இன்பம் எந்த கண்ணும் பார்த்திடாதது எந்த காதும் கேட்டிராதது. மனிதர்களை சுவர்கத்துக்கு அனுப்பியவுடனே அவர்கள் சுவர்க்க இன்பத்தை நுகர ஆரம்பிக்கமாட்டார்கள். பல காலங்களுக்கு சுவர்கத்தையே பார்த்துக் கொண்டேயிருப்பார்கள். ஏன் தெரியுமா சுவர்கத்தை பார்த்துக் கொணடிருப்பதே ஒரு இன்பம் மகிழ்ச்சியாக இருக்கும். நீங்கள் சுற்றுலாக்கள் சென்று இயற்கiயின் அழகை அப்படியே நின்று ரசிப்பது போல.   

2. சுவர்க்கத்தின் செயற்கை அழகு.   
சுவர்க்கத்தின் செயற்கை அழகு கற்பனை செய்து பாருங்கள் ஒரு அழகான மாளிகை அதற்கு முன்னால் ஒரு அழகான பூந்தோட்டம் அதிலே அழகான கண்ணழகிகளான ஹூர்லீன்கள். அமைதியான குளிரான ஒரு காற்று வீசுகிறது. அவ்வாறு பல மாளிகைகள் அடுத்தடுத்து கற்பனை செய்து பாருங்கள். நம்  கற்பனைக்கு வருவதைவிட மிகவும் மிகவும் உயர்ந்த அழகாகவே சுவர்க்கம் இருக்கும். அதன் மாளிகைகள் பளிங்குகளால் ஆனது. இந்த உலகத்திலே நாம் சில வீடுகளை கண்டு மயங்குவது உண்டு அதன் அழகில். அப்படியென்றால் கொஞ்சம் சிந்தித்து பாருங்கள் அல்லாஹ்வின் சுவர்கத்தின் படைப்பு எப்படியிருக்மென்று.  

3.மனநிம்மதியும் மனஅமைதியும்.  
இந்த உலக வாழ்க்கையை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள் மனஅமைதி என்பது இல்லாமலேயே நமக்கு இருக்கும் எந்நேரமும் வேலை அடுத்தவனின் பிரச்சினை கொலை கொள்ளை சம்பவங்கள் கேட்டவண்ணமே இருக்கும் அடுத்தவனின் சொத்துக்கு ஆசைப்படல் அடுத்தவனைவிட அதிகம் சம்பாதிக்க தடுமாறல் என்று எமக்கு நிம்மதியே இல்லாமல் தான் நம் வாழ்வு கழிகின்றது. ஆனால் சுவர்க்கத்தில் அடுத்தவீட்டு பிரச்சினை அடுத்தவனை பற்றி யோசித்தல் என்ற எந்த ஒரு கவலையும் இல்லாமல் நிம்மதியாக மனஅமைதியோடு இருக்கும். ஆதனால் தான் சுவர்க்கத்துக்கு தாருஸ்ஸலாம் என இன்னொரு பெயர் உள்ளது. ஆங்கு அமைதி நிலவும் அழகான கடற்கரை அழகான மாளிகை அழகான பெண்கள் நிம்மதியான சூழல் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். சுவர்க்கம் எப்படியிருக்குமென்று.     

4.மனதிருப்தி  
உலகில் யாரிடமும் இல்லாதவொன்று தான் மனதிருப்தி எவ்வளவு உழைத்தாலும் போதாது எவ்வளவு சொத்துக்கள் இருந்தாலும் போதாது நிரையப் பேர் இப்படி சொல்வதுண்டு 'நான் அவருக்கு எவ்வளவு செய்தேன் கடைசியில் அவர் இப்படி செய்து விட்டாரே' இப்படி குறைபட்டுக் கொள்ளும் பலரை நீங்கள் பார்த்திருப்பீர்கள். பலர் வெளிநாடுகளில் சென்று கோடிக்கணக்கில் உழைக்கிறார்கள் ஆனால் அவர்கள் சொந்த குடும்பத்துடன் இல்லை குடும்பத்தை போடோவில் பார்த்தே அவரின் காலம் போகும். குடும்பத்தில் யாரும் இறந்தால் வந்து கொள்ள வழியில்லை எந்நேரமும் சம்பாதிப்பு உழைப்பு உழைப்பு உழைப்பு மாட்டைவிட கடுமையாக உழைக்கிறார்கள். கடைசியில் கண்ட பயன் எதுவும் இல்லை. ஒரு வகையான திருப்தி இல்லாமலேயே நாங்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.   உலகில் யாரும் சொல்வதில்லை எனக்கு இது போதும் நான் முழமையாக திருப்தி கொண்டுவிட்டேன் என்று ஆனால் சுவர்க்கத்தில் இப்படியான எந்தவொரு பிரச்சினையுமில்லை. மனதிருப்தியுடன் வாழலாம்.   ஆழகான இயற்கை சூழல்,அழகான மாளிகைகள், ஆழகான பெண்கள்,மனநிம்மதி,மனதிருப்தி,நோய்கள் இல்லை,அடுத்தவரின் தொந்தரவு இல்லை. சுவர்க்க இன்பங்கள் வார்தைகளால் விளக்க முடியாதவை நாம் நினைப்பதைவிட பல மடங்கு உயர்ந்தது. கடைசியாக நரகம் செல்பவனுக்கான கூலி இந்த உலகத்தை போல பல மடங்கு பெரியது அதிலே தான் இந்த இன்பங்கள் சந்தோசங்கள் நிரைந்திருக்கும்.     ஆனால் சுவர்க்கத்தில் ஒரேயொரு கவலையிருக்கும் அது தான் நான் உலகில் இன்னும் கொஞ்சம் கஷ;டப்பட்டிருந்தால் அவரைவிட கொஞ்சம் உயர்திருக்கலாமே என்ற கவலை. ஆனால் அவர்கள் திருப்தி கொள்வார்கள் நான் செய்ததற்கு இதுவே பெரி கூலி என்று. ஊலகில் வரும் கஷ;டங்களுக்கு நாம் வருந்தத் தேவையில்லை அவற்றை பொறுத்து மார்க்கத்துக்கு முரண் இல்லாமல் வாழந்தால் எமக்கு கிடைக்கப்போகும் கூலி மகத்தானது நிலையானது சிறப்பானது.   நாமும் எமது குடும்பத்தாரும் எமது சகோதரர்களும் எனது நண்பர்களும் எனது அயலவர்களும் இந்த அழகான நிலையான சிறப்பான இன்பத்தை அனுபவிக்கும் பாக்கியத்தை தந்தருள்வாயாக யா அல்லாஹ்.

About Me

My photo
Share the information which attract me.

image

Lorem ipsum dolor sit

Aliquam sit amet urna quis quam ornare pretium. Cras pellentesque interdum nibh non tristique. Pellentesque et velit non urna auctor porttitor.

image

Nunc dignissim accumsan

Vestibulum pretium convallis diam sit amet vestibulum. Etiam non est eget leo luctus bibendum. Integer pretium, odio at scelerisque congue.